நவம்பர் 1 முதல் முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்களை வரவேற்கிறது தாய்லாந்து

பேங்­காக்: நவம்­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்து பேங்­காக் மற்­றும் ஒன்­பது வட்­டா­ரங்­க­ளுக்கு வரும் வெளி­நாட்டு சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்கு கட்­டா­யத் தனி­மை­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­படும் என்று தாய்­லாந்து அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

ஆனால் அவர்கள் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும் என்று அது வலி­யு­றுத்­தி­யது.

பொது­மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வதை வேகப்­ப­டுத்­தி­யுள்ள அர­சாங்­கம், நாட்­டின் சுற்­றுலா துறையை மீட்­டெ­டுக்­கும் முயற்­சி­யில் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளது.

சியாங் மாய், பங்­கங்கா, கிராபி, ஹுவா ஹின், பட்­டாயா, மற்­றும் சா-ஆம் உள்­ளிட்ட புகழ்­பெற்ற சுற்­றுலா வட்­டா­ரங்­கள் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­குத் திறக்­கப்­ப­டு­கின்­றன.

கடந்த ஜூலை மாதம் முன்­னோட்­டத் திட்­ட­மாக புக்­கெட், சாமுய் தீவு­கள் திறக்­கப்­பட்­டன.

இந்த வெற்­றி­யைத் தொடர்ந்து மற்ற வட்­டா­ரங்­களும் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­குத் திறக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

சுற்­று­லாத் துறையை தாய்­லாந்து பெரி­தும் நம்­பி­யுள்­ளது.

ஆனால் பதி­னெட்டு மாதக் கடு­மை­யான நுழை­வுக் கட்­டுப்­பாடு களால் அத்­துறை பொலி­வி­ழந்து காணப்­ப­டு­கிறது.

2019ல் மட்­டும் 40 மில்லியன் பய­ணி­கள் தாய்லாந்­துக்கு வந்­த­னர்.

இந்நிலையில் வெளிநாட்டுப் பயணிகளை மீண்டும் வரவேற்க தாய்லாந்து ஆர்வமுடன் உள்ளது.

அக்­டோ­பர் 1ஆம் தேதி முதல் நாடு முழு­வ­தும் வரு­கை­யா­ளர் ­க­ளுக்­கான தனி­மைக்காலத்தையும் அதி­கா­ரி­கள் குறைத்துள்ளனர்.

தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்கு ஏழு நாட்­க­ளாகவும் தடுப்­பூசி போடா­த­வர்­க­ளுக்கு பத்து நாட்­ களாகவும் குறைக்­கப்­படும் என்­று நாட்­டின் கொவிட்-19 பணிக்­குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!