நார்வேயில் தென் கிழக்கே கொங்ஸ்பெர்க் நகரில் அம்பு எய்து ஐந்து பேரைக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான அந்த ஆடவர் டெனிஷ் நாட்டவர் அன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவத்தில், பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். நார்வே
தாக்குதல் நடத்தியவர் தனியாகவே செயல்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்ட காவல்துறை, தாக்குதலுக்கான காரணம் குறித்து தெரிவிக்கவில்லை.
கைதின்போது காயமடைந்த அந்த ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தலைநகர் ஓஸ்லோவிலிருந்து 68 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அந்நகரின், பேரங்காடி உட்பட வெவ்வேறு இடங்களில் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அந்த ஆடவர் அம்புத் தாக்குதலை நடத்தியுள்ளார். சுவர்களில் அம்பு பாய்ந்த அடையாளங்கள் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் எட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் மூன்று ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. நகரம் எங்கும் ஆயுதம் ஏந்திய காவல்துறையில் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உத்தோயா தீவில், இளையர் முகாமொன்றி தீவிரவாதியான ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் 77 பேரைக் கொன்ற படுகொலைக்குச் சம்பவத்திற்குப் பிறகு நடந்துள்ள மோசமான தாக்குதலாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.
பொதுவாக ஸ்கன்டிநேவியன் நாடுகளில் காவல்துறையினர் துப்பாக்கியுடன் பணி புரிவதில்லை. நேற்றைய சம்பவத்தை அடுத்து அனைத்து காவல்துறைப் பணியாளர்களும் ஆயுதம் வைத்திருக்குமாறு என்று நார்வே காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டிருக்கிறது.
நார்வேயில் அம்பெய்து ஐவரைக் கொன்றவர் கைது
14 Oct 2021 17:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!