‘தொற்று குறைந்தபின் டிரேஸ்டுகெதர், சேஃப்என்ட்ரி நடைமுறை மறுஆய்வு’

கொவிட்-19 தொற்று பாதிப்பு மேலும் தணிந்­த­ பிறகு டிரேஸ்­டுகெதர், சேஃப்என்ட்ரி, தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான நடை­மு­றை­கள் உள்­ளிட்ட பாது­காப்பு நிர்­வாக நட­வடிக்­கை­கள் மறு­ஆய்வு செய்­யப்­படும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்திருக்­கி­றார்.

உணவு, பான நிலை­யங்­களில் மேசை­க­ளுக்கு இடை­யி­லான பாது­காப்பு இடை­வெளி விதி­மு­றை­கள் போன்ற மற்ற நடை­மு­றை­களும் மறு­ஆய்வு செய்­யப்­படும் என்று திரு ஓங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று கூறி­னார்.

அத்­த­கைய கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட பிறகு, இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­களைப் பொறுத்­த­மட்­டில், முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­ப­தும் தொற்று பரவ மிகுந்த வாய்ப்­புள்ள இடங்­க­ளைத் தவிர்ப்­ப­தும் அவர்­களின் தனிப்­பட்ட பொறுப்பு என்­றார் அமைச்­சர் ஓங். இல்­லை­யேல், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது என அவர்­கள் மனம் மாற வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

"பொது மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை குறைந்­த­போ­தும், அவை இன்­னும் பர­ப­ர­ப்­பா­கவே இயங்கி வரு­கின்­றன," என்­றார் திரு வோங்.

கடந்த வாரத்­தில் இருந்து பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் தளர்த்­தப்­பட்­டி­ருப்­ப­தும் மருத்­து­வ­மனை­க­ளுக்­குப் பார்­வை­யா­ளர் வருகை மீண்­டும் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­தும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளின் பணிச்­சு­மையை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இன்­னும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­தோரை கொரோனா தொற்­றி­னால் அவர்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தால் தடுப்­பூசி அடிப்­படை­யி­லான நடை­மு­றை­கள் இன்­னும் தேவைப்­ப­டு­வ­தாக அமைச்­சர் ஓங் சுட்­டி­னார்.

"மருத்­து­வ­ம­னை­யில் நிலைமை சீராகி, மேம்­பட்டு வரு­வதை உறுதி­செய்­த­பின், தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான நடை­மு­றை­கள் நடப்­பி­ல் உள்ள இடங்­க­ளைக் குறைப்­பது அல்­லது அவற்றை முழு­மை­யாக அகற்­று­வது குறித்து மறு­ஆய்வு செய்­யப்­படும்," என்­றார் அவர்.

தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான நடைமுறைகள் நீக்­கப்­பட்­ட­பின் சேஃப்என்ட்ரியும் தேவைப்­ப­டாது என்று அவர் குறிப்­பிட்­டார்.

டிரேஸ்­டு­கெ­த­ரைப் பொறுத்­த­மட்­டில், பொது­மக்­க­ளி­டத்­தில் தொடர்­பு­க­ளின் தட­ம­றிய சுகா­தார அமைச்சு அத­னைச் சார்ந்­தி­ருக்­க­வில்லை என்­றும் அதே நேரத்­தில், பள்­ளி­கள் போன்ற எளி­தில் பாதிக்­கப்­பட அதிக வாய்ப்­புள்ள சூழல்­களில் அது தொடர்ந்து பயன்­படுத்­தப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

டிரேஸ்­டு­கெ­தர், சேஃப்என்ட்ரி மூலம் தொகுக்­கப்­பட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள், கொவிட்-19 பர­வ­லால் எளி­தில் பாதிக்­கப்­ப­ட­வல்ல இடங்­களைப் பற்­றிய நல்ல யோச­னையை அதி­கா­ரி­க­ளுக்கு வழங்க முடி­யும் என்பது திரு ஓங்­கின் கருத்து.

"ஆகை­யால், டிரேஸ்டுகெதர் உகந்­த­தாக இருக்­கி­றதா இல்­லையா என்­ப­தை­யும் அதன் பயன்­பாட்­டை­யும் அது இனித் தேவைப்­ப­டுமா இல்­லையா என்­ப­தை­யும் கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு மறு­ஆய்வு செய்­யும்," என்று அமைச்­சர் ஓங் விளக்­க­மா­கக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!