‘தெக்வாண்டோ’ பயிற்சியில் 16 வயதிலேயே கறுப்பு ‘பெல்ட்’ பெற்ற ஷரண்யா, வேறு என்ன கற்றுக்கொள்ளலாம் என்று யோசித்தார். ‘பிரேசிலியன் ஜியூ ஜிட்சூ’ பற்றி 22 வயது ஷரண்யா அசோகன் கேள்விப்பட்டார்.
இது ஒருவகைத் தற்காப்புக் கலையாகும். படிப்பு காரணமாக எப்போதும் உட்கார்ந்திருப்பதாலும் உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருந்ததாலும் தனது உடல் எடை வேகமாக அதிகரிக்க ஆரம்பித்ததைக் கவனித்தார் ஷரண்யா.
அதனால், தனது பல்கலைக் கழகத்திலிருந்த ‘எம்எம்ஏ’ இணைப்பாட நடவடிக்கைவழி அவர் இந்த ‘பிரேசிலியன் ஜியூ ஜிட்சூ’ பயிற்சியை மேற்கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக இதைப் பயின்று வரும் ஷரண்யா, வருங்காலத்தில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் போட்டியில் பங்கேற்க விரும்புகிறார்.
‘பிரேசிலியன் ஜியூ ஜிட்சூ’ பயிற்சிவழி, உடல் எடை குறைகிறது. மேலும், இதில் ஈடுபடுவதற்கு உடலில் அதிகளவு வலு தேவை என்று ஷரண்யா குறிப்பிட்டார்.