வளரும் தமிழ்க் கவிஞர்களுக்கான பயிலரங்கு

ஆ. விஷ்ணு வர்தினி

வளர்ந்து வரும் தமிழ்க் கவி ஞர்களுக்கு தங்களது எழுத்துப் படைப்புகளை மேலும் மெருகூட்டி, மறுபரிசீலனை செய்ய வாய்ப்பளிக் கின்றது பேராசிரியர் பெருந்தேவி ஸ்ரீநிவாசனின் ஆறு நாள் பயிலரங்கு.

ஆசிய புத்தாக்க எழுத்துமுறை திட்டத்தின் 'சமகாலத் தமிழ்க் கவிதை' எனப்படும் இப்பயிலரங்கில் தொடக்க நிலை எழுத்தாளர்கள் முதல் இடைநிலை எழுத்தாளர்கள் வரை கலந்துகொண்டு பயனடைய லாம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகள் எழுதி, ஒன்பது கவிதை தொகுப்புகளை வெளி யிட்டுள்ள முனைவர் பெருந்தேவி, நவீன தமிழ்க் கவிதைகளை அணுகும் முறை, எழுதும் முறை குறித்து ஆழமாக அறிவதற்கும் கவித்திறனை மேம்படுத்துவதற்கும் வழிகாட்டுவார்.

இவர், தமிழ் இலக்கிய இதழ் களில் எழுதி வரும் கவிஞரும் குறுங்கதை எழுத்தாளரும் ஆவார்.

"இப்பயிலரங்கின் மூலம், வள ரும் கவிஞர்கள், கவிஞர்களின் தனித்துவமான பாணிகளை ஆராய்வதோடு, கவிதையிலுள்ள அழகியலைப் பாராட்டுவர்.

"எழுத்துக் கலையுடன், வாசிப்புக் கலையிலும் இம்முயற்சி ஆர்வத்தைத் தூண்டும் என நம்புகிறேன்.

"முற்றுப்பெறா கவிதைப் பயணத் திற்கான கதவுகளை இப்பயிலரங்கு திறந்து வைக்கும் என்றும் நம்பு கிறேன்," என்றார், அமெரிக்காவின் சியெனா கல்லூரியில் துணை பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் பெருந்தேவி.

பயிலரங்கில் கலந்துகொள்வோர், தற்சமயம் நிலவும் 'லிரிக்கல்' கவிதை வடிவம், எதிர்கவிதை ஆகியவை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

கவிதையில் எவ்வாறு சொற்சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது, தேய்வழக்குகளைத் தவிர்ப்பது, எவ்வகைகளில் திருத்தி எழுதுவது ஆகியவற்றையும் இப்பயிலரங்கு வழங்கவிருக்கும் படிப்பினைகளாக முனைவர் பெருந்தேவி குறிப்பிட்டார்.

ஜூன், ஜூலை மாதங்களில் இடம்பெறவிருக்கும் இப்பயிலரங்கு தேசிய நூலகத்தில் காலை முதல் மதியம்வரை நடைபெறும்.

பயிலரங்குக்கு பதிவு செய்ய, ஆர்வமுள்ளோர் தங்களது எழுத்துப் படைப்பையும் படைப்புத் திட்டத்தின் சுருக்கத்தையும் சுய சரிதையையும் அனுப்பிவைக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படுவோர் பயிலரங்குக்கு அழைக்கப்படுவர்.

பெரியோரும் மாணவர்களும் முறையே $150, $60 கட்டணம் செலுத்தி ஆறு நாள் பயிலரங்கில் கலந்துகொள்ளலாம். 16 வயதுக்கு மேலுள்ள மாணவர்களுக்கு இலவச அனுமதி உண்டு.

பதிவு செய்வதற்கான இறுதி நாள், ஜூன் 6.

மேல் விவரங்களுக்கு: https://blogs.ntu.edu.sg/acwp/2021/07/07/perundevi-ps1a/

சமகாலத் தமிழ்க் கவிதை குறித்த ஆங்கில-மொழிக் கவிஞர் களுக்கான வெபினார் தொடரையும் முனைவர் பெருந்தேவி வழிநடத்த உள்ளார்.

மேல் விவரங்களுக்கு: https://blogs.ntu.edu.sg/acwp/2021/07/07/perundevi-ps7/

தேசிய கலைகள் மன்றமும் நன்பாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்தும் ஆசிய புத்தாக்க எழுத்துமுறை திட்டம் பன்மொழி எழுத்தாளர் களுக்கும் பலவகை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றது.

சிங்கப்பூரின் புத்தாக்க எழுத்துமுறை கல்வியை மேம்படுத்த இத்திட்டம் 2011ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வரு கின்றது.

பயிலரங்கின் மூலம் வளரும் கவிஞர்கள், கவிஞர்களின் தனித்துவமான பாணிகளை ஆராய்வதோடு, கவிதையிலுள்ள அழகியலைப் பாராட்டுவர். எழுத்துக் கலையுடன், வாசிப்புக் கலையிலும் இம்முயற்சி ஆர்வத்தைத் தூண்டும். முற்றுப்பெறா கவிதைப் பயணத்திற்கான கதவுகளையும் இப்பயிலரங்கு திறந்து வைக்கும் என நம்புகிறேன்.

முனைவர் பெருந்தேவி ஸ்ரீநிவாசன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!