விஜயகாந்த் மாநாடு இன்று; தேமுதிக முடிவுக்கு ஆவல்

காஞ்சிபுரம்: தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநில மாநாடு இன்று காஞ்சிபுரத்தில் நடக்கிறது. தொண்டர்கள் இரு நாட்களுக்கு முன்பே சென்னை, காஞ்சிபுரம் நோக்கிச் செல்ல கிளம்பிவிட்டார்கள். அந்த மாநாட்டில் கூட்டணி முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் அந்த முடிவு தனக்கு ஆதரவாக இருக்கும் என்றும் திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகள் காஞ்சிபுரத்தை நோக்கி பார்வையைத் திருப்பி இருக் கின்றன. தேர்தல் நேரங்களில் தேமுதிக சார்பில் நடத்தப்படும் மாநாடுகள் தமிழக அரசியலில் பெரும் எதிர் பார்ப்புகளை ஏற்படுத்தி வந்து உள்ளன. 2011ல் சேலத்தில் உரிமை மீட்பு மாநாடு, 2014ல் விழுப்புரத்தில் ஊழல் ஒழிப்பு மாநாடு போன்றவற்றை தேமுதிக நடத்தியது. அந்த வகையில் 2016 தேர்தலையொட்டி அரசியல் திருப்பு முனை மாநாட்டை தேமுதிக இன்று நடத்துகிறது.

'காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும், ஆட்சி மாறட்டும்' என்ற முழக்க வாசகத்துடன் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாட்டை வெற்றிபெறச் செய்ய அனைவரையும் கேட்டுக்கொள் கிறேன்," என்று ஏற்கெனவே தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!