செய்திக்கொத்து

எலிசபெத் அரசியின் இறுதிச் சடங்கில்

அதிபர் ஹலிமா கலந்துகொள்வார்

அதிபர் ஹலிமா யாக்கோப், வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பிரிட்டனின் மறைந்த எலிசபெத் அரசியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள லண்டன் செல்லவிருக்கிறார். வெளியுறவு அமைச்சு நேற்று இதைத் தெரிவித்தது.

அதிபர் ஹலிமாவுடன் அவரது கணவர் முகம்மது அப்துல்லா அல்ஹப்ஷியும் இஸ்தானா, வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் உடன்செல்வார்கள்.

அதிபர் வெளிநாட்டில் இருக்கும்போது, அதிபர் ஆலோசனை மன்றத்தின் தலைவர் எடி டியோ, அதிபர் அலுவலகத்தின் பணிகளைக் கவனிப்பார்.

ருபெல்லா நோயை சிங்கப்பூர் ஒழித்தது

ருபெல்லா எனப்படும் ஜெர்மன் தட்டம்மையை ஒழிப்பதற்கான எல்லா அளவுகோல்களையும் நிறைவேற்றி, சிங்கப்பூர் அந்த நோயை ஒழித்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

குறைந்தது மூன்று அண்டுகளுக்கு ருபெல்லா உள்ளூரில் பரவாமல் இருப்பதை உறுதி செய்தது, உயர்தரக் காண்காணிப்பு, தொற்றுப்பரவல் நிறுத்தப்பட்டதை நிரூபிக்கும் மரபணுக்கூறு ஆய்வுச் சான்றுகளை வழங்கியது ஆகியவற்றை சிங்கப்பூர் செய்துள்ளது.

2018ஆம் ஆண்டு இங்கு தட்டம்மை ஒழிக்கப்பட்ட பின்னர், சிங்கப்பூர் ருபெல்லா நோயை ஒழிக்க பணியாற்றி வந்ததாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் மூத்த இயக்குனர் பேராசிரியர் வெர்னன் லீ கூறினார்.

சுகாதாரப் பராமரிப்பில் புத்தாக்கம்: சிங்ஹெல்த், எஸ்ஐடி உடன்பாடு

வரும் 2024ஆம் ஆண்டுக்குள், தாதிகள், துணை மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப் பராமரிப்புத் துறை பொறியாளர்கள் ஆகியோருக்கு தானியங்கித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் முதுநிலை டிப்ளோமா பட்டம், சான்றிதழ் வகுப்புகள் தொடங்கப்படும்.

சிங்ஹெல்த் அமைப்பும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகமும் நேற்று கையெழுத்திட்ட புரிந்துணர்வுக் குறிப்பின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், புத்தாக்கமிக்க சுகாதாரப் பராமரிப்புக்கான தீர்வுகளை உருவாக்க, கழகத்தின் மாணவர்களும் விரிவுரையாளர்களும் சில்ஹெல்த் அமைப்பின் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். இத்திட்டம் அடுத்த ஆண்டுக்குள் நடப்புக்கு வரும்.

இதில் பங்கெடுப்பவர்கள், மருத்துவச் சூழலில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்க மானியங்களைப் பெறலாம்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை

அடுத்த இரண்டு வாரங்களுக்கு முற்பகலிலும் பிற்பகலிலும் சிறிது நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை நிலையம் முன்னுரைத்துள்ளது.

செப்டம்பர் முதல் பாதியைப் போலவே சிங்கப்பூரிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் தென்மேற்குப் பருவநிலை தொடரும். தென்மேற்கு, தென்கிழக்கு திசைகளில் தொடர்ந்து காற்று வீசும். சுமத்ரா தீவில் திடீர் புயல் ஏற்பட்டு சிங்கப்பூரில் பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய மழையும் பெய்யலாம் என்றும் முன்னுரைக்கப்பட்டது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கான பதிவேடு

கடும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல், மூச்சு இரைத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

சிலர் இதனால் வேலைக்குச் சிலநாள் செல்ல முடியாமல் போகலாம். அல்லது தூங்கச் சிரமப்படலாம்.

இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உதவ சிங்கப்பூர் கடும் ஆஸ்துமா நோயாளி பதிவேடு கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது.

கடும் ஆஸ்துமா நோய் பற்றி மேலும் புரிந்துகொள்ளவும் மேலும் செயல்திறன் மிக்க சிகிச்சைகளை வழங்கவும் கடம் ஆஸ்துமா நோய்க்காக சிங்கப்பூரில் வழங்கப்படும் பராமரிப்பை மேம்படுத்தவும் இப்பதிவேடு அமைக்கப்பட்டுள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் மருத்துவப் பள்ளி, சாங்கி பொது மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை ஆகியவை அடங்கிய ஆய்வுக் கட்டமைப்பு இந்தப் பதிவேட்டைத் தொடங்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!