மரினா ஸ்குவேர் பாலம் பாதுகாப்பாக உள்ளது: பிசிஏ

மரினா ஸ்குவேர் கடைத் தொகு திக்கும் மில்லேனியா வாக் கடைத்தொகுதிக்கும் இடைப் பட்ட மக்கள் கடந்து செல்லும் மேம்பாலத்தின் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கட்டட, கட்டுமான ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்தது. திங்கட்கிழமை காலை 11.45 மணிக்கு ஒரு கனரக லாரியின் பாரந்தூக்கி மேம்பாலத்தின் கீழ் பகுதியை உரசிக்கொண்டு சென்றதால், பாலத்தில் கீழ்ப் பகுதிக் கூரைப் பகுதிகள் பாதிப்படைந்தன. பாதிப்படைந்து கீழே விழுந்த பாலத்தின் கீழ்ப்புற கூரையின் பகுதிகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. ஆணையத்தின் கட்டடப் பொறியாளர்கள் சோதித்துப் பார்த்ததில், பாலத் தின் வடிவமைப்புக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அறி யப்பட்டது. கனரக லாரியின் ஓட்டுநரான 56 வயது ஆடவர் கைது செய் யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!