$287 மில்­லி­ய­னுக்­கு­மேல் நிதி திரட்­டப்­பட்­டுள்­ளது

அருட்­கொடை துறை­யில் பங்­கா­ளித்­து­வத்­துக்­கான புதிய கூட்­டணி

அருட்கொடை தொடர்­பான துறை­யில் பங்­கா­ளித்­து­வத்தை அதி­க­ரிக்­கும் நோக்­கில் அமைக்­கப்­பட்ட புதிய கூட்­டணி மூலம் 287 மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகை திரட்­டப்­பட்­டுள்­ளது.

பூமி தொடர்­பான விவ­கா­ரங்­கள், அமைதி, மக்­கள், வளர்ச்சி ஆகிய அம்­சங்­கள் தொடர்­பில் இது செய­லாற்­றும்.

தெமா­செக் அறக்­கட்­ட­ளைத் தலை­வர் ஹோ சிங் இத­னைத் தெரி­வித்­தார்.

தெமா­செக் அறக்­கட்­டளை, தெமா­செக் அற­நி­று­வ­னம் ஆகி­யவை ஏற்­பாடு செய்த அருட்கொடை தொடர்­பான ஆசிய உச்­ச­நிலை மாநாட்­டில் அவர் உரை­யாற்­றி­னார்.

ஷங்­ரிலா சிங்­கப்­பூர் ஹோட்­ட­லில் நேற்று இந்த உச்­ச­நிலை மாநாடு நடை­பெற்­றது.

இரண்­டா­வது முறை­யாக நடை­பெற்ற இந்த மாநாட்­டில் பேசிய திரு­வாட்டி ஹோ, நல்ல பலன் தரக்­கூ­டிய, மேலும் ஒத்­து­ழைக்­கும் ஒருங்­கி­ணைந்த அணு­கு­மு­றை­யைப் புதிய கூட்­டணி வழங்­கும் என்­றார்.

புதிய கூட்­ட­ணி­யின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அற­நி­று­வ­னம், டாலியோ ஃபிலாந்­தி­ரோ­பிஸ், லி கா ஷிங் அற­நி­று­வ­னம், டனோடோ அற­நி­று­வ­னம், சினார் மாஸ் அமைப்­பின் நான்கு நிறு­வ­னங்­கள் ஆகி­யவை தலா 25 மில்­லி­யன் டாலர் நிதி­ய­ளித்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

மற்ற பங்­கா­ளித்­துவ நிறு­வ­னங்­களும் ஆத­ர­வா­ளர்­களும் ஒரு மில்­லி­யன் டால­ருக்­கும் 10 மில்­லி­யன் டால­ருக்­கும் இடைப்­பட்ட தொகையை நன்­கொ­டை­யாக வழங்க உறு­தி­ய­ளித்­துள்­ளன.

தெமா­செக் அறக்­கட்­டளை 100 மில்­லி­யன் டாலர் நிதியை வழங்க உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கக் கூறிய திரு­வாட்டி ஹோ, இந்­தக் கூட்­ட­ணி­யில் உல­கப் பொரு­ளி­யல் மன்­றம் உத்­தி­பூர்­வப் பங்­கா­ளி­யா­கச் செயல்­படும் என்று தெரி­வித்­தார்.

வோங் பார்ட்­னர்­ஷிப், ஃபிரெஷ்­ஃபீல்ட்ஸ் பிரக்­காஸ் டெரிங்­கெர் ஆகிய நிறு­வ­னங்­கள் இந்­தக் கூட்­ட­ணியை அமைப்­ப­தற்­கான இல­வச சட்­டச் சேவையை வழங்­கின.

அடுத்த ஒன்­பது முதல் 12 மாதங்­களில் இந்­தக் கூட்­டணி அதி­கா­ர­பூர்­வ­மா­கச் செயல்­ப­டத் தொடங்­கும் என்­றார் திரு­வாட்டி ஹோ.

வரும் மாதங்­களில் கூடு­த­லான நிறு­வ­னங்­கள் இதில் இணை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பூமி­யின் நலன், அமைதி, மக்­கள், வளர்ச்சி ஆகிய நான்­கும் லாப­நோக்­க­மற்ற இந்­தக் கூட்­ட­ணி­யின் முன்­னு­ரி­மை­கள் என்று திரு­வாட்டி ஹோ குறிப்­பிட்­டார்.

இந்த நான்­கின் வெற்­றிக்­கும் பங்­கா­ளித்­து­வம் மிக முக்­கி­யம் என்­றார் அவர்.

இந்த ஆண்­டின் உச்­ச­நிலை மாநாடு பரு­வ­நிலை மாற்­றம் தொடர்­பான நட­வ­டிக்­கை­களும் நீடித்த நிலைத்­தன்மை மிக்க சமு­தா­ய­மும், அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய கல்­வி­முறை, மீள்­தி­றன் கொண்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்பு ஆகிய கருப்­பொ­ருள்­களில் கவ­னம் செலுத்­து­கிறது.

மாநாட்­டில், வட்­டார எரி­பொ­ருள் நிர்­வா­கம், பெருந்­தொற்­றுத் தயார்­நிலை தொடர்­பான திட்­டம், உயி­ரி­யல்­சார்ந்த எரி­பொ­ருள் திட்­டம், பாலர் பருவ மேம்­பாட்­டுத் திட்­டம், ஆசி­யான் நாடு­க­ளின் குழந்­தை­க­ளுக்­கான மர­பி­யல் திட்­டம், ஆசி­யா­வில் உயர்­கல்வி தொடர்­பான திட்­டம் என ஆறு திட்­டங்­கள் தொடங்கி வைக்­கப்பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!