கட்டுக்கட்டாக கள்ளப்பணம்: 10 கோடி ரூபாய் சிக்கியது

வேலூர்: வேலூர் மாவட்­டம் பள்­ளி­கொண்டா அருகே சுமார் 10 கோடி ரூபாய் பணத்தை பறி­மு­தல் செய்த காவல்துறையினர், 4 பேரைக் கைது செய்­த­னர். இந்த அள­வுக்குப் பெரிய தொகையைக் கொண்டு செல்வதற்கான ஆவ­ணம் எது­வும் அவர்­க­ளி­டம் இல்லை.

வேலூர் மாவட்­டத்­தின் வழி­யாக சென்னை, திரு­வண்­ணா­மலை, ஆந்­திரா, கர்­நா­டகா, கேரளா உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்கு இரவு நேரங்­களில் தமி­ழக அர­சால் தடை­செய்­யப்­பட்ட குட்கா மற்­றும் கஞ்சா உள்­ளிட்ட பொருள்களை மர்ம நபர்­கள் கடத்திச் செல்­கின்­ற­னர். வழி­ப­றி­யி­லும் அவர்கள் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

அவர்களைக் கண்காணிக்க வேலூர் மாவட்டம் முழு­வ­தும் காவல்­து­றை­யி­னர் இரவு நேரங்­களில் வாகன சோத­னை­க­ளி­லும் சுற்றுக்காவல் பணி­க­ளி­லும் தீ­வி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

அந்த வகை­யில், வேலூர் மாவட்­டம் பள்­ளி­கொண்டா காவல் நிலைய காவ­லர்­கள் நேற்று முன்­தி­னம் இரவு முழு­வ­தும் சுற்றுக்காவல் பணி­யில் ஈடு­பட்டு இருந்­த­னர். அப்­போது, பள்­ளி­கொண்டா அடுத்த கோவிந்­தம்­பா­டி­யில் தேசிய நெடுஞ்­சா­லையை ஒட்­டிய பகு­தி­யில் ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருள்­களை சிலர் ஏற்­றுக்கொண்­டி­ருப்­பதை அவர்­கள் கண்­ட­னர்.

உட­ன­டி­யாக விரைந்து சென்று அவர்­க­ளி­டம் காவ­லர்­கள் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். அப்­போது, அவர்­கள் முன்­னுக்­குப் பின் முர­ணாக பதில் அளித்­துள்­ள­னர். மேலும், அவர்­கள் வைத்­தி­ருந்த பெரிய பொட்டலங்களைப் பிரித்து பார்த்­த­போது, அதில் கட்­டுக்­கட்­டா­கப் பணம் இருப்­பது தெரிய வந்­துள்­ளது.

அவர்­கள் வைத்­தி­ருந்த பணத்­திற்கு உரிய ஆவ­ணம் எது­வும் இல்­லா­த­தால், கறுப்புப் பொட்டலங் கள் மூலம் லாரி­யில் ஏற்ற முயன்ற சுமார் 10 கோடி ரூபாய் பணத்­தை­யும் காரை­யும் பறி­மு­தல் செய்த காவ­லர்­கள், நான்கு பேரை கைது செய்து பள்­ளி­கொண்டா காவல் நிலை­யத்­தில் வைத்து விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

48 பொட்டலங்களில் ரொக்­கப்­

ப­ணம் மறைத்து வைக்­கப்­பட்டு இருந்­தது.

பிடி­பட்ட நபர்­கள் சென்னை பிராட்­வே­யி­லி­ருந்து கேரள மாநி­லம் கோழி­கோட்­டிற்கு அந்­தப் பணத்தை கடத்­தப்­ப­ட­வி­ருந்­தது விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது. இது தொடர்­பாக வேலூர் மாவட்ட காவல் துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

மேலும், 10 கோடி ரூபாய் பணம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது தொடர்­பாக வேலூர் வரு­மான வரித் துறை­யி­ன­ருக்கு தக­வல் கொடுக்­கப்­பட்டு அவ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது. பிடி­பட்­டது ஹவாலா பணமா என்­றும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கிறது.

சென்னையிலிருந்து கேரளாவிற்குக் கடத்த முயன்ற கும்பல் பிடிபட்டது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!