சனிப் பெயர்ச்சி: சிறப்பு வழிபாடுகள்

தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் இன்று அதிகாலை 5.22 மணியளவில் பெயர்ச்சி அடைந்தார்.

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு கோயில்களில் இந்த நிகழ்வு தொடர்பாக சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

இந்தியாவின் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் அமைந்துள்ள புகழ் பெற்ற சனிபகவான் கோயிலிலும் சனிப்பெயர்ச்சி விழா இன்று  சிறப்பாக நடைபெற்றது. 

2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அந்தக் கோயிலில் கூட்டம் அலைமோதும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இவ்வாண்டு கூட்டம் குறைவாகவே இருந்ததாகக் கூறப்பட்டது.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் கோயில்களில் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!