‘வெஸ்ட் கோஸ்ட்டுக்கு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி புதிதல்ல’

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி) ஒரு புதிய கட்சி என்றாலும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியைப் பொறுத்தவரையில் அது புதிது அல்ல என்று அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் டான் செங் போக், 80, தெரிவித்தார். மக்கள் செயல் கட்சியைப் பிரதிநிதித்து ஆயர் ராஜா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தான் சாதித்தவற்றை அவர் பட்டியலிட்டார்.

வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் குடியிருப்பாளர்களின் வாழ்வை மேம்படுத்த தாங்கள் சாதித்து உள்ளவற்றை அடிப்படையாக வைத்து மக்கள் செயல் கட்சி பிரசாரம் மேற்கொள்ளும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஈஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்து இருந்தார்.

அதற்குப் பதிலளித்த திரு டான் செங் போக், தன்னுடைய கட்சியும் அவ்வாறே செய்யும் என்றார்.

திரு டான், 1980 முதல் 2006 வரை 26 ஆண்டு காலம் ஆயர் ராஜா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அந்தத் தொகுதி 2006ல் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றத்தின் தலைவராக 2001 முதல் 2005 வரை திரு டான் சேவையாற்றினார். அப்போது தான் சாதித்தவற்றை எல்லாம் அவர் பட்டியலிட்டு குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!