ஜூரோங்கிலிருந்து வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கு மாறிய டெஸ்மண்ட் லீ

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ வரும் தேர்தலில் வெஸ் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் அவர் ஜூரோங் குழுத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

டாக்டர் டான் செங் போக், 80, தலைமையிலான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வலுவான போட்டியளிக்கும் நோக்கில் வலுவான குழுவை வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் மசெக களமிறக்கியுள்ளது.

அந்தத் தொகுதியில் மசெக சார்பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், 58, இரண்டு தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திருவாட்டி ஃபூ மீ ஹார், 54, திரு அங் வெய் நெங், 53, புதுமுகமான திருவாட்டி ரேச்சல் ஓங், 47 ஆகியோர். திரு ஈஸ்வரன் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் லியோங் முன் வாய், 60, துணைத் தலைவர்  ஹேஸல் புவா, 50,  Ed எனும் அனைத்துலக அளவிலான காப்புறுதி நிறுவனத்தின் ஆசியா-பசிபிக் தலைமை விற்பனை அதிகாரியான திரு ஜெஃப்ரி கூ போ தியோங், 51, ஓய்வு பெற்ற மூத்த சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரியான திரு நடராஜா லோகநாதன், 57 ஆகியோர்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online