‘இனவாரியான சமூகநல அமைப்புகள் தேவையில்லை’

நாடாளுமன்றத்தில் மக்கள் செயல் கட்சி (மசெக) இந்தியர்களை அறிமுகம் செய்யாதது குறித்து அதிர்ச்சி அடைந்ததாகக் கூறிய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் கலா மாணிக்கம், நாடாளுமன்றத்தில் இன அடிப்படையிலான ஒதுக்கீடு தவறு என்றும் தெரிவித்தார்.

திறமை அடிப்படையிலான அமைப்பைக் கட்டிக்காப்பதற்கும்; இன, சமய வேறுபாடுகளைக் கடந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க சிங்கப்பூரர்கள் பற்றுறுதி எடுத்துள்ள இலக்கிற்கும் இது முரணாக இருக்கும் என்றார் நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிடும் திருவாட்டி கலா மாணிக்கம்.

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் இன ஒதுக்கீட்டு முறை இல்லை என்றும் தகுதி முறைதான் பின்பற்றப்படுகிறது என்றும் திரு சண்முகம் நேற்று தமிழ் முரசிடம் தெரிவித்தார் (விவரம் 3ஆம் பக்கம்).

“மறைந்த முதல் தலைமுறை அமைச்சர் திரு எஸ். ராஜரத்தினம் புனைந்த பற்றுறுதியில் இன, மொழி, சமய வேறு பாடுகளை சிங்கப்பூரர்கள் மறக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதுதான் எங்கள் கொள்கையும்கூட,” என்றார் அவர்.

சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒரே மக்களாகப் பார்க்கப்படும்போது, சிண்டா, மெண்டாக்கி, சிடிசி என இனவாரியான சமூக நல அமைப்புகள் தேவையில்லை.

மேலும் அடையாள அட்டையில் இனம் குறிப்பிடப்படக்கூடாது. இவை திறன் அடிப்படையிலான முறைக்கு முரணானது,” என்று பெரியவர்களுக்கான கல்வியாளராகப் பணிபுரியும் திருவாட்டி கலா கூறினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் போதிய அளவில் இடம்பெறாவிட்டால், தம்மைப் போன்ற எதிர்க்கட்சியினரால் தொடர்ந்து பேசுவதைத் தவிர சிங்கப்பூரர்களுக்கு வேறு எதையும் செய்ய முடியாது என்ற திருவாட்டி கலா, சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் குழுவினரை எதிர்த்துப் போட்டியிடுவது உற்சாகம் அளிப்பதாகக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!