கொவிட்-19 விவகாரம்: தொலைக்காட்சியில் நேரடி விவாதம் நடத்த டான் செங் போக் யோசனை

கொவிட்-19 கிருமி பரவலைச் சமாளிக்கும் விதம் பற்றி அமைச்சர்களுடன் தொலைக்காட்சியில் நேரடி விவாதம் நடத்தலாம் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டான் செங் போக் யோசனை தெரிவித்து இருக்கிறார்.

அந்த நேரடி விவாதத்தில் தானும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பால் தம்பையாவும் ஓர் அணியிலும் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கும், சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் மறு அணியிலும் இடம்பெற்று விவாதிக்கலாம் என்றாரவர்.

நீ சூன் குழுத்தொகுதியில் தன்னுடைய கட்சியினருடன் தொகுதி உலா சென்ற டாக்டர் டான் செய்தியாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையிலும் விவாதிப்புகளிலும் கொவிட்-19 பிரச்சினைக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று அமைச்சர் திரு சான் குறிப்பிட்டு இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் டாக்டர் டான் இவ்வாறு குறிப்பிட்டார்.

இருந்தாலும் தொலைக்காட்சி விவாதம் அரங்கேறும் பட்சத்தில் அதில் தான் கிளப்பப்போகும் பிரச்சினைகள் பற்றிய திட்டங்களை டாக்டர் டான் முன்வைக்கவில்லை.

அமைச்சர் பதிலடி

இதனிடையே, திரு டான் தெரிவித்த தொலைக்காட்சி விவாதிப்பு யோசனைக்கு வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் இன்று ஃபேஸ்புக்கில் பதிலளித்தார்.

கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் பொருளியல் நெருக்கடியில் இருந்து மீண்டு வர சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் எப்படி எப்படியெல்லாம் உதவலாம் என்று திரு டானும் டாக்டர் தம்பையாவும் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவிக்கவேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

வாக்களிப்பதற்கு முன்பாக இவற்றை தெரிந்துகொண்டு ஒரு முடிவு எடுக்க வாக்காளர்கள் விரும்புவார்கள் என்பது நிச்சயம் என்றார் அமைச்சர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!