விநியோகக் கட்டணம், விவரம் திருடும் வித்தை

உங்கள் பொருளை அனுப்பிவைக்க கூடுதல் கட்டணம் கேட்கப்படுகிறதா? அது உங்கள் விவரங்களைத் திருடும் மோசடியாக இருக்கலாம்.

கடந்த அக்டோபர் மாதத்தில், பொருள்களை விநியோகிக்கும் மோசடியில் சுமார் 25 பேர் பாதிப்படைந்து ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இணையத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பொருள்களை மறுஉறுதி செய்ததும் சில விசைகளை அழுத்திவிட்டு வெளியேறப் பார்க்கின்றீர்கள். உங்கள் பதிவுகள் உறுதியாக காத்திருக்கும் நேரத்தில், ஒரு குறுஞ்செய்தி கைத்தொலைபேசிக்கு அனுப்பப்படுகிறது. அச்செய்தியில் பிரச்சினையின்றி சுமூகமாக நீங்கள் விரும்பி வாங்கிய பொருள் உங்களை வந்தடைய கூடுதல் கட்டணம் கேட்கப்படுகிறது.

இது உங்கள் விநியோகம் சரளமாக நடந்திட ஒரு எளிய செயல்பாடா? இல்லை.

பொருள்கள் விநியோக மோசடியின் செயல்பாட்டை அறிந்துகொள்ளுங்கள், உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

மோசடி

1. விநியோக விவரத்துடன் ஒரு போலியான குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் பாதிக்கப்பட்டோரை வந்தடைகிறது.

2. இந்த குறுஞ்செய்திகளிலும் மின்னஞ்சல்களிலும் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடான வழிகளில், அவற்றைப் பெறுபவருக்குத் தெரியாமல் (தூண்டில்போட்டு) எடுத்துக்கொண்டு மற்றொரு செயல்படாத இணையத்தளத்துக்கு இட்டுச்செல்லும் இணைப்புகள் இடம்பெற்றிருக்கும்.

3. தனிப்பட்ட விவரங்கள் அல்லது வங்கி கணக்கின் தகவல்கள் ஆகியவற்றை வெளியிடும்படி பாதிக்கப்படுவோர் கேட்டுக்கொள்ளப்படுவர்.

4. அனுமதியற்ற பரிவர்த்தனைகள் வங்கிக் கணக்கிலும் கடன் அட்டைகளிலும் நடந்தபின்புதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை பாதிப்படைந்தோர் அறிந்துகொள்வர்.

அரண் (ஷீல்டு)

பொருள்கள் விநியோக மோசடியில் கடந்த அக்டோபர் மாதம் குறைந்தது 25 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் $38,000 வரை இழந்துள்ளனர் என்று சிங்கப்பூர் காவல் துறையினர் கூறினர்.

வரப்போகும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்காலத்தையும் முக்கிய இணைய விற்பனைப் பருவத்தையும் கருத்தில்கொண்டு,மின் வர்த்தக மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்று  காவல் துறை கண்காணிப்பாளர், மோசடி பற்றிய பொதுக் கல்வி செயல்பாட்டு அலுவலகத்தின் இயக்குநர், திருவாட்டி ரோஸி அன் மெக்கின்டையர் கேட்டுக்கொண்டார்.  

தமது பெயரையும் முத்திரைகளையும் பயன்படுத்தி நடக்கக்கூடிய பொருள்கள் விநியோக மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த,  சிங்கப்பூர் (சிங்போஸ்ட்) அஞ்சலகம் அண்மையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

“எங்களது சமூக ஊடகத் தளங்களில் அடிக்கடி பொருள்கள் விநியோக மோசடி சார்ந்த பதிவுகளை செய்துவருகிறோம். சிங்போஸ்ட் இணையப்பக்கத்தில்  (singpost.com/online-security-you), ஒரு புதிய பயிற்சிப் பகுதியையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்று சிங்போஸ்ட் அமைப்பின் பேச்சாளர் கூறினார். 

சிங்போஸ்ட்டின் வாடிக்கையாளர் சேவைக் குழு,  வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அனுப்பப்படுகின்ற பல விவரங்களில் எவ்வாறு இணைப்புகளை அடையாளம் காண வேண்டும் என்பதைப் பற்றிய ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கிவருகிறது. சேம் போன்ற தானியக்க சேவை இயந்திரம், கைபேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் சிங்போஸ்ட் செயலி அல்லது நேரடியாக சிங்போஸ்ட் அஞ்சல் அலுவலகங்கள் ஆகியவை வழியாக மட்டுமே சிங்போஸ்ட்டுக்கான கட்டணங்கள் செலுத்தப்படமுடியும். ஆகவே, இணையத்தில் வேறு எந்த வித கட்டணங்களும் சிங்போஸ்ட் சார்பாக கேட்கப்படுவது மோசடியின் அறிகுறியாகும் எனவும் அப்பேச்சாளர் விவரித்தார். 

அறிகுறிகள்

சந்தேகத்துக்குறிய குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள்

அவை எப்படி காட்சியளிக்கின்றன: மின் வர்த்தக நிறுவனங்களாலும் அஞ்சல் வழியாகவும் அனுப்பப்பட்டதுபோல அவை காட்சியளிக்கும். அவை மிரட்டும் பாணியிலும் உங்களை உடனே செயல்படத் தூண்டும் விதத்திலும் தோன்றும்.

அவை எப்படி அமைந்திருக்க வேண்டும்: பொருள்களை வாங்கிட நீங்கள் செய்திருந்த முன்பதிவுகளை அந்தந்த நிறுவனங்களின் இணையப்பக்கங்களில் அல்லது கைத்தொலைபேசி செயலிகளுடன் சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

‘கூடுதல் கட்டணம் தேவை’

அவை எப்படி காட்சியளிக்கின்றன: நீங்கள் விரும்பி வாங்கிய பொருள்களை விநியோகம் செய்வதை சரளமாக்கிட கூடுதல் கட்டணங்கள் தேவைப்படுவதாக கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். சில சமயங்களில் தீங்கு விளைவிக்கும் நிரலைக்கொண்ட மூன்றாம் தரகரின் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி தூண்டப்படுவீர்கள்.

அவை எப்படி அமைந்திருக்க வேண்டும்: பொதுவாக ஒரு பொருளை நீங்கள் வாங்கும்போதே அதன் விநியோகத்துக்கான செலவுகளை உள்ளடக்கியே கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. எனவே ஒரு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் அல்லது செயலித் தொகுப்புகள் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கட்டண வழிமுறைகளை பயன்படுத்துங்கள். எவ்வித சம்பந்தமும் இல்லாமல் உள்பதிக்கப்பட்ட இணைப்புகளுடன் வரக்கூடிய குறுஞ்செய்திகளையும் மின்னஞ்சல்களையும் எக்காரணத்தைக்கொண்டும் பயன்படுத்தாதீர்கள்.

மின் வணிக மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள உடனே நடவடிக்கை எடுங்கள்

  • ஸ்கேம்ஷீல்ட் செயலி, பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கவும்:

ஸ்கேம்ஷீல்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் சாதனங்களில் வங்கிகள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் ஆகியவற்றுக்கான இரண்டு அம்சம் உறுதிப்பாடு போன்ற பாதுகாப்பு வகைகளை அமைக்கவும். அண்மைய பாதுகாப்பு அம்சங்களுடன் சாதனங்களைப் புதுப்பித்து, வைரஸ் தடுப்பு செயலியை பதிவிறக்கவும். ‘பேநவ்’, ‘பேலா’ உட்பட இணைய வங்கி பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பை நிர்ணயிக்கவும்.

  • மோசடியை அடையாளம் கண்டுகொள்ள அதிகாரபூர்வ வழிமுறைகளை நாடுங்கள்:

சம்பந்தம் அற்ற மின்னஞ்சல், குறுஞ்செய்திகளில் வரக்கூடிய உங்கள் தனிப்பட்ட விவரங்களை திருட முயலும் இணையத்தளங்களை அடையாளங்காணுங்கள். அவற்றில் உங்களை அழுத்தச் சொல்லும் இணைப்புகளின் விசைகளை தவிர்த்துவிடுங்கள். எக்காரணத்தைக்கொண்டும், ஒருமுறை தரப்படும் மறைச்சொல் உட்பட்ட தனிப்பட்ட வங்கி விவரங்களை, யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். எந்த பணப்பரிவர்த்தனைக்கும் ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர், பலமுறை சரிபார்த்துக்கொள்ளவும். முன்பதிவுகள், கட்டணங்கள், விநியோகம் ஆகியவற்றை செய்திட எவ்வித அறிமுகமும் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள். அதிபாரப்பூர்வ தொகுப்புகளில் இயங்கும் முறையான செயலிகளை மட்டும் மறுவுறுதி செய்தபின் பதிவிறக்கம் செய்யுங்கள்.

  • அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லுங்கள்:

நீங்கள் மோசடிகளை எதிர்கொண்டால் அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள். மேலும் சந்தேகத்திற்குரிய கணக்குகள் அல்லது சுயவிவரங்களை அந்தந்த சமூக ஊடகத் தளங்களில் தெரிவித்து, அவற்றைத் தடுக்கவும். ஆக அண்மைய மோசடிப் போக்குகள் பற்றிய தகவல்களை உங்கள் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். அண்மைய மோசடி எதிர்ப்பு ஆலோசனைகளைப் பெற NCPC மோசடி எச்சரிக்கை வாட்ஸ்அப் சேனலைத் தொடரவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!