ஒரு நல்ல ஒப்பந்தம் இணையத்தில் கிடைத்ததா? இப்படிப்பட்ட  மின் வர்த்தக மோசடியின் அறிகுறிகளை நீங்கள் முறையானதா என்று சரிபார்த்த பின்னரே, அவற்றிலிருந்து வெளியேறுங்கள்.  

பேரத்தால் துயரம் நேரலாம்

நம்பவே முடியாத வகையில் இணையத்தில் விலைச் சலுகைகளும் கழிவுகளும் இருந்தால், அவை உண்மையல்ல என்று இணைய மோசடி பற்றி நன்கு அறிந்த நிபுணர் ஒருவர் கூறுகிறார். 

விலைச் சலுகைகளை எதிர்பார்த்து, 33 வயதான திருவாட்டி எலீன் ஓங், இணையத்தில் நேரத்தை விரும்பிச் செலவிடுகிறார்.

நேரடிக் கணினித் தொடர்பு பேரங்களுக்கு அலைச்சறுக்கு விளையாட்டை விரும்புகிறார்.

கடந்த மாதம் மிக மலிவான 20 விழுக்காடு கழிவு வழங்கும் கடல் உணவக விளம்பரத்தை ஒரு முகநூலில் அவர் பார்த்தார். மறுக்கமுடியாத ஒன்றாக அவ்விளம்பரம் அவரைக் கவர்ந்தது.

இருப்பினும் உடனே அதற்கு முன்பதிவு செய்யாமல், அந்த கல்வி ஆலோசகராக பணியாற்றும் திருவாட்டி ஓங், தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சில சோதனைகளை மேற்கொண்டார்.

கூகலில் அந்த உணவகத்தைப் பற்றித் தேடினேன். வாடிக்கையாளர்களின் நேர்மறை கருத்துகள் இருந்ததையும் எதிர்மறையான எந்த விவரமும் அங்கு இல்லாததையும் அறிந்துகொண்டேன். மேலும் அவர்களின் முகநூலைப் பார்த்ததில் அது 2017ல் உருவாக்கப்பட்டிருந்தது. எனவே, மிக அண்மையில் வடிவமைக்கப்பட்ட முகநூலாக அது இல்லை. மோசடியில் ஈடுபடும் சந்தேகத்துக்குரிய கணக்குகளைப்போல இந்த உணவகம் எனக்கு தோன்றவில்லை என்றார் திருவாட்டி ஓங்.

ஆகவே, தமது சுய பரிசோதனைகள் மூலம் அந்நிறுவனம் முறையாகச் செயல்படுவதை உறுதிசெய்த பின்னர், அவரது முன்பதிவுகளைச் செய்தார். பாதுகாப்பு நடவடிக்கையாக, கைத்தொலைபேசியில் உள்ள வங்கிச் செயலியின் வழியாக, அவரது பேநவ் (PayNow) கணக்கில் இணைய பரிவர்த்தனை செய்யக்கூடிய தொகைக்கான உச்ச வரம்பை ஏற்படுத்திக்கொண்டார். அதற்கு மேலும் சோதனைக்காக, ஒரு சிலப் பொருட்களுக்கான முன்பதிவுகளை மட்டுமே அவர் செய்தார்.

ஏன் இத்தனை பாதுகாப்பு என்ற கேள்விக்கு, “கடந்த சில மாதங்களாகவே, இணையத்தில் மோசடிக்கு ஆளானோரின் கதைகளை படித்துள்ளேன். இணைய வர்த்தகம் உண்மையில் வசதியான ஒன்றாக இருந்தாலும், முன்பைவிட இப்போது அது பாதுகாப்பாக இல்லை” என்றார் அவர்.

கட்டணம் செலுத்திய சில நாட்கள் கடந்து, அவர் முன்பதிவு செய்திருந்த உறைந்த விலாமீன்கள் வகைகள் அவரை வந்தடைந்தன. விழிப்புணர்வைத் தொடர்ந்து கடைப்பிடித்து, பின்னாளில் வருத்தப்படுவதைத் தவிர்த்து பாதுகாப்பாக இருப்பதே முக்கியம் என்று அவர் கருதுகிறார்.

அவசரம், அலட்சியம் இரண்டையும் தவிர்க்கவும்

2023ன் முதல் பாதியில் 4,516 குடியிருப்பாளர்கள் மின் வர்த்தக மோசடிக்கு ஆளானார்கள் என்று சிங்கப்பூர் காவல் துறை தெரிவித்தது. இது அனைத்து வகை மோசடிகள் பட்டியலில் இரண்டாம் நிலையில் உள்ளது.

பொதுவாக, இந்த வகை மோசடிகளில் நேரடியாக சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்காது. இணையத்தில் கவர்ச்சியான பேரங்களும் திட்டங்களும் வழங்கப்பட்டு, முன்பதிவுகள் செய்யப்படும். கட்டணங்கள் செலுத்தப்பட்டாலும் பொருட்கள் வாடிக்கையாளர்களை வந்தடைவதில்லை.

சில நேரங்களில், மோசடிக்கு ஆளானோர், பணத்தை திரும்பப்பெறவோ, சேவையை பெறவோ, பொருளை வாங்கவோ ஒரு செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள். முன்பணம் செலுத்திய பிறகு, மோசடிக்காரர்கள் அவர்களால் அந்த முன்பதிவை முறையாக முடித்துவைக்க முடியவில்லை என்று பொய்யான பதிலை கொடுப்பார்கள். மோசடிக்காரர்கள் பதிவிறக்கம் செய்யத் தூண்டிய அந்தச் செயலிகளில் தீங்குநிரல் மென்பொருள்(Malware) இருப்பதால், பாதிப்படைந்தோரின் மின் கருவிகளை ஊடுறுவி, தனிப்பட்ட விவரங்களையும் அறிந்துகொண்டு வங்கிக் கணக்குகளை அவர்கள் குறிவைத்து செயல்படுத்திக்கொள்வார்கள்.

மிகக் கவர்ச்சியான சலுகைகளை காட்டி, குறுகிய காலக்கெடுகளைக் கொண்ட குறைந்த இருப்புகளே உள்ளன போன்ற உடனடித் தேவையை உருவாக்கும் வாக்குறுதிகளை மோசடிக்காரர்கள் அடிக்கடி இணையத்தில் வழங்குவர். இதனால் அந்த இணைய கணக்குகள் அல்லது சமுக ஊடகப் பக்கங்கள் முறையானவையா என்பதை சரிபார்த்து, சோதனைகள் மேற்கொள்ளாமல் பாதிப்படைவோர் உடனடியாக முடிவெடுக்க நிர்பந்தப்படுத்தப்படுகின்றனர். இதனை சிங்கப்பூர் காவல் துறை, மோசடி தொடர்பான பொதுக் கல்வி அலுவலக நடவடிக்கைத் துறையின் துணை இயக்குநர் திரு ஜெப்ரி சின் தெரிவித்தார்.

அறிவாற்றல் சார்ந்த முடிவெடுக்கும் தன்மையும் தனிப்பட்டவர்களை மோசடியில் சிக்கிடும் அளவுக்கு பாதிப்பதாகவும் அவர் கூறினார். உதாரணமாக மின்னிலக்க செயல்பாடுகளில் சரளமாகி சமூக ஊடகங்களில் இளையர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் தைரியமாக இணையத்தில் பொருட்களை வாங்குகிறார்கள். அவர்களே மோசடியில் ஏமாற்றப்படும் ஆபத்தில் இருக்கிறார்கள். முக்கிய விவரங்களை பரிசோதிக்காமல், விற்பனை செய்வோரின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யாமல் அவர்கள் செயல்பட்டுவிடுகின்றனர் என்று திரு ஜெப்ரி சின் தெளிவுபடுத்தினார்.

சிங்கப்பூர் காவல் துறையின் பதிவுகள், 2023ன் முதல் பாதியில், இணைய மோசடிக்கு ஆளானவர்களில் 50.8 விழுக்காட்டினர், 20 முதல் 39 வயதுடைய இளையர்கள் என்று தெரிவிக்கின்றன. மின் வர்த்தக மோசடியில் சிக்கிய நால்வரில் ஒருவர் (23.9 விழுக்காடு) இந்த வயதுப் பிரிவைச் சார்ந்தவர்கள்.

குறுகிய காலக்கெடுவைக்கொண்டு விலையில் பெரும் கழிவுகளை வழங்கும் திட்டங்களையும் பேரங்களையும் இணையத்தில் பார்க்கும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் அவற்றை அணுக வேண்டும் என்று திரு ஜெப்ரி சின் அறிவுறுத்தினார்.

நம்பவே முடியதா வகையில் இணையத்தில் விலைச் சலுகைகளும் கழிவுகளும் இருந்தால், அவை உண்மையல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்,

இணைய விற்பனையாளர்களிடம் முன்பணம் தருவதையும் நேரடியாக வங்கியின் வழி பண பரிமாற்றம் செய்வதையும் தவிர்த்து பாதுகாத்துக்கொள்ளலாம். இணையத்தில் தரப்படும் இணைப்புகள், முன்றாம் தரகர்கள் செயலிகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம். முறைப்படுத்தப்பட்ட மின் வர்த்தக நிறுவனங்களின் நேரடிக் கட்டண சேவைத் தளங்களை மட்டும் சரிபார்த்து பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணையத்தில் பொருட்கள் வாங்குவோருக்கென, பல்வேறு மின் வணிகர்கள் இணையத்தில் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

கவனிக்க வேண்டிய மோசடி அறிகுறிகள்:

  • சந்தை விகிதத்தைவிட விலைகள் குறைவாக உள்ளவை
  • பொருட்களின் விவரங்கள் முழுமை பெறாத நிலை
  • நேரடியாக வங்கியின் வழி பணப் பரிவர்த்தனை செலுத்துமாறு விற்பனையாளர் கேட்கிறார்
  • பல விதமாக கட்டணங்களை விற்பனையாளர் கேட்கிறார்
  • இணையத் தளத்திலிருந்து உரையாடலை விற்பனையாளர் வெளியேற்ற முயற்சிக்கிறார்
  • பணம் செலுத்தவோ முன்பதிவு செய்யவோ ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்ய விற்பனையாளர் ஒரு மாற்று தளத்தின் இணைப்பை அனுப்புகிறார்

3 முன்னணித் தளங்கள்

அடிக்கடி மின் வணிக மோசடிகள் நிகழும் தளங்கள்

  • ஃபேஸ்புக்
  • கேரொசல்
  • டெலிகிராம்

பொதுவாக மின் வணிக மோசடிகள் பின்வருவனவற்றின் சம்பந்தமானவை

  • வாடகை வீடுகள்
  • மின்னணுவியல்
  • உணவுப் பொருட்கள்
  • இசை நிகழ்ச்சி டிக்கெட்டுகள்

மின் வணிக மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள உடனே நடவடிக்கை எடுங்கள்

  • ஸ்கேம்ஷீல்ட் செயலி, பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கவும்:

ஸ்கேம்ஷீல்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் சாதனங்களில் வங்கிகள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் ஆகியவற்றுக்கான இரண்டு அம்சம் உறுதிப்பாடு போன்ற பாதுகாப்பு வகைகளை அமைக்கவும். அண்மைய பாதுகாப்பு அம்சங்களுடன் சாதனங்களைப் புதுப்பித்து, வைரஸ் தடுப்பு செயலியை பதிவிறக்கவும். ‘பேநவ்’, ‘பேலா’ உட்பட இணைய வங்கி பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பை நிர்ணயிக்கவும்.

  • மோசடியை அடையாளம் கண்டுகொள்ள அதிகாரபூர்வ வழிமுறைகளை நாடுங்கள்:

அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் அல்லது நற்பெயர் கொண்ட நிறுவனங்களிடம் மட்டும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள். வாடிக்கையாளர்கள் வழங்கும் தர மதிப்பீடுகளையும் கருத்துகளையும் சரிபாருங்கள். மோசடியை அடையாளம் கண்டுகொள்ள (www.scamalert.sg அல்லது மோசடிக்கு எதிரான நேரடி தொலைபேசி 1800 722 6688) அதிகாரபூர்வ வழிமுறைகளை நாடுங்கள்.

  • அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லுங்கள்:

நீங்கள் மோசடிகளை எதிர்கொண்டால் அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள். மேலும் சந்தேகத்திற்குரிய கணக்குகள் அல்லது சுயவிவரங்களை அந்தந்த சமூக ஊடகத் தளங்களில் தெரிவித்து, அவற்றைத் தடுக்கவும். ஆக அண்மைய மோசடிப் போக்குகள் பற்றிய தகவல்களை உங்கள் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். அண்மைய மோசடி எதிர்ப்பு ஆலோசனைகளைப் பெற NCPC மோசடி எச்சரிக்கை வாட்ஸ்அப் சேனலைத் தொடரவும்.

சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!