முதியோரைத் துடிப்புடன் வைத்திருக்கும் விளையாட்டுகள்

மூப்படையும் மக்கள்தொகையைக் கொண்டுள்ள சிங்கப்பூரில், நடமாடும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர்வாசி குடும்பங்களில் நடமாடும் பிரச்சினைகளைக் கொண்ட 65 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையே ஏறக்குறைய 25,500லிருந்து 50,000க்குக் கூடியதாக சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை தெரிவித்தது.

வெவ்வேறு உடல்ரீதியான அல்லது அறிவுசார்ந்த ஆற்றல்களைக் கொண்டுள்ள மூத்தோருக்கு, மாற்றியமைக்கப்பட்ட விளையாட்டுகள் தகுந்தவையாக இருக்கும். அதோடு அவை மூத்தோரின் உடல், மனரீதியான நலனையும் மேம்படுத்த உதவும் என்று சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் ‘ஸ்போர்ட்கேர்ஸ்’ அமைப்பின் பிரிவுத் தலைவர் ஷான் லிம் கூறினார்.

2022ஆம் ஆண்டிலிருந்து 60க்கு மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 சமூகப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும், மாற்றியமைக்கப்பட்ட விளையாட்டுகளை நடத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாக ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பில் உள்ள ஆரோக்கிய மூப்படைதல் துறையின் தலைவர் ஹெய்டி ரஃப்மான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

மூத்தோர் துடிப்புடன் இருக்கவும் எளிதில் விளையாடவும் தரைப்பந்து போன்ற விளையாட்டுகளை மாற்றியமைக்கும் வழிகாட்டியை அமைக்க, 2020ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, ‘ஸ்போர்ட்கேர்ஸ்’ அமைப்புடன் இணைந்து செயல்பட்டது.

அந்த விளையாட்டுகள் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் முதல் சற்று நன்கு நடமாடுவோர் வரை, வெவ்வேறு ஆற்றல்கள் உடையவர்களுக்குத் தகுந்தவாறு பிரிக்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!