இழப்பிலிருந்து மீண்டு லாபம் ஈட்டும் சிங்போஸ்ட்

2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட $9.9 மில்லியன் நிகர நஷ்டத்திலிருந்து மீண்டு $11.5 மில்லியன் நிகர லாபம் ஈட்டியுள்ளது சிங்போஸ்ட் நிறுவனம்.

செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் முற்பாதியில் அந்நிறுவனம் இந்த நிகர லாபத்தை ஈட்டியது.

ஆஸ்திரேலியாவில் செயல்படும் சிங்போஸ்ட்டின் தளவாட நிறுவனமும் உலகளாவிய எல்லைத் தாண்டிய வணிகமும் லாபத்தை உயர்த்தியதாக அது வியாழக்கிழமை தெரிவித்தது.

சிங்போஸ்ட்டின் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 13.7 விழுக்காடு சரிந்து வந்த நிலையில் சென்ற ஆண்டு அது $958.9 மில்லியனிலிருந்து $827.3 மில்லியனாக சரிந்தது.

கொள்ளை நோய் காலத்திற்குப் பிறகு சரக்குக் கட்டணங்களையும் அளவுகளையும் இயல்பாக்கியதும் அந்நியச் செலாவணியின் தாக்கமும் வருமானச் சரிவிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அந்நிறுவனத்தின் 85 விழுக்காடு வருமானம் அனைத்துலக வணிகத்தைச் சார்ந்து இருக்கிறது.

இதனால், வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பிறக்கம் சிங்போஸ்ட்டின் வருமானத்தைப் பாதிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!