புதிய பேருந்து நிறுவனம் 60% ஓட்டுநரைச்சேர்த்தது

சிங்கப்பூரின் நான்காவது பொதுப் போக்குவரத்து நிறுவனமான கோ அஹெட் (Go=Ahead) பிப்ரவரி 15ல் ஓட்டுநர் சேர்க்கை பற்றி அறிவிப்பு விடுத்தது. அது முதல் அது மொத்தம் 424 பேரை வேலையில் சேர்த்துள்ளது. சேவையைத் தொடங்குவதற்கு முன்னதாக 700 பேருந்து ஓட்டு நர்களை அது பணியில் சேர்க்க இருக்கிறது. இதுவரை 60% இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பிரிட்டனைச் சேர்ந்த கோ அஹெட் நிறுவனம், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் லோயாங்கில் சேவையைத் தொடங்க இருக்கிறது. சேவை தொடங்கும்போது 700 பேர் பணியில் இருப்பார்கள் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்தது. லோயாங் திட்டத்தில் இப்போது சேவையில் இருக்கும் 22 சேவை களும் புதிதாக மூன்று சேவைகளும் அடங்கும்.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இப்போது இந்த 22 சேவைகளை பாசிர் ரிஸ், பொங்கோல் ஆகியவற்றில் நடத்தி வரு கிறது. கோ அஹட் நிறுவனம், குறைந்தபட்ச சம்பளமாக $1,865 தருகிறது. கவர்ச்சிகரமான $2,000, $1,000 ஊக்கத்தொகைக் கொடுக்கவும் திட்டம் உள்ளது. வருடாந்திர அலவன்ஸ் தொகை $430-$830 உண்டு. பிரசவ விடுப்பு 16 முதல் 26 வாரங்கள். இரண்டு நாட்கள் முதியோர் பராமரிப்பு விடுப்பு, ஆறு நாட்கள் சிறார் பராமரிப்பு விடுப்பும் கிடைக்கும். சிங்கப்பூரில் பேருந்து, ரயில் சேவைகளில் ஊழியர்கள் இலவசமாகச் செல்லலாம்.

கோ அஹெட் நிறுவனத்தின் சிங்கப்பூர் நிர்வாக இயக்குநர் நிகெல்வுட் (கருப்பில்) ஊழியர் ளுடன் படத்துக்கு காட்சி தந்தார். படம்: கோ அஹெட் சிங்கப்பூர் ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!