‘மாறிவிட்டது கண்ணோட்டம் மாற்றிவிட்டது இணையம்’

உலகத்தைப் பற்றிய மக்களின் கண்ணோட்டத்தை இணையம் மாற்றிவிட்டது என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் உலகப் பாதுகாப்பு மாநாடு ஒன்றில் தெரி வித்தார். இணையத்தின் வழியாக பயங் கரவாத அமைப்புகள் உலகக் கும்பல்களை உருவாக்க முடிகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய கும்பல்கள் பூகோள ரீதியில் பிரிந்து இருந்தாலும் ஒரே உலகக் கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொள்கின்றன என்று குறிப்பிட்டார். "உலகத்தைப் பற்றிய மக்களின் கண்ணோட்டம் மாறி இருப்பதால் இந்த நவீன உலகில் பயங்கரவாதம் செழிக்க முடிகிறது," என்று அமைச்சர் கூறினார்.

வழிவழியான ஊடகங்கள் குறுகிய பார்வைக்கு வழிவிட்டு ஒதுங்கிவிட்டதை அவர் எடுத்துக் காட்டாகக் குறிப்பிட்டார். இந்தக் குறுகிய பார் வையில் மக்கள் தாங் கள் கேட்க விரும்பாத செய்திகளை விலக்கி விட விழைகிறார்கள். " துண்டு துண்டா கி கிடக்கின்ற இத்தகைய ஓர் உலகில் இப்போது நாம் வாழ்கிறோம். இது குறுகிய மனநிலைக்கு நம்மை ஆளாக்குகிறது," என்று அமைச்சர் குறிப் பிட்டார். இதன் காரணமாக முன்பின் தெரியாதவர் கள் பல இடங்களிலும் தாக்குதல் நடத்தக்கூடிய சூழ்நிலை உருவா கிறது. தேசிய பாதுகாப்பு அமைப்பு களுக்கு முன்பின் தெரியாதவர் களாகவும் இவர்கள் இருக்கிறார் கள் என்று அமைச்சர் கூறினார்.

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன். படம்: வெளியறவு அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!