50 ஆண்டு ஆராய்ச்சி பற்றிய வரலாற்றைக் கூறும் நூல்

சிங்கப்பூரில் ஒரு காலத்தில் பொறியாளர்களுக்கும் தொழில் நுட்பர்களுக்கும் பஞ்சமிருந்தது. இன்று அது ஆராய்ச்சி, மேம் பாட்டுத் துறையில் உலகத் தரம் வாய்ந்த முன்னணி நாடாக விளங்குகிறது. சிங்கப்பூரில் ஆராய்ச்சி பற்றிய 50 ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தைப் பட்டியலிடும் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று இவ்வாறு தெரிவித்த துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், இப்பொழுது சிங்கப்பூர் 180 நீர்வள நிறுவனங்கள், 26 ஆராய்ச்சி மையங்கள் கொண்ட நீர் தொடர்பான ஆராய்ச்சியில் பெயர் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், வயிற்றுப் பகுதியில் அமில சுரப்பால் ஏற்படும் புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சி, புதிய அறுவை சிகிச்சை முறை களை அறிமுகப்படுத்துவது போன்றவற்றிலும் சிங்கப்பூர் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், உலகிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் தனது தகுதியை வலுப்படுத்திக் கொள்ளும்விதமாக ஆராய்ச்சியாளர் களையும், அறிவியல் வல்லுநர்களையும் பொறியாளர்களையும் சிங்கப்பூர் தொடர்ந்து உருவாக்கி வரும் என்றும் திரு டியோ சீ ஹியன் தெரிவித்தார்.

'தி சிங்கப்பூர் ரிசர்ச் ஸ்டோரி' நூலை எழுதிய (இடமிருந்து வலம்) ராஜ் தம்பூரன், பேராசிரியர் ஹங் சாங் சீயே, பேராசிரியர் லோ தெக் செங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!