$83,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

மத்திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவினர் 83,000 வெள்­ளிக்கு மேல் மதிப்­புள்ள போதைப்­ பொ­ருட்களை நேற்று பறி­மு­தல் செய்­துள்­ள­னர். போதைப்­பொ­ருள் கடத்­தல்­ கா­ரர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பிடிபட்டவர்களிடம் இருந்து அவர்கள் பறிமுதல் செய்தனர். ரிவர்­வேல் கிர­செண்ட்­டில் பணி­யி­லி­ருந்த அதி­கா­ரி­கள் திங்கட்­கிழமை காலை சந்தேக நபர்­களை கண்ட­தா­கக் கூறியது சிஎன்பி எனப்படும் மத்திய போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு. போதைப்­பொ­ருள் கடத்­தல்­ கா­ரர் என்று சந்­தே­கிக்­கப்­படும் சிங்கப்­பூ­ர­ரான 30 வயது ஆடவரும் அவ­ரு­டன் இருந்த பெண்ணும் மற்ற இரு­வரைச் சந்­தித்­த­தாக சிஎன்பி கூறியது. சந்­திப்­பிற்­குப் பிறகு, காரில் சென்ற ஒருவர் உட­ன­டி­யாக பிடி­பட்­டார். மற்ற மூவரும் மவுண்ட்­ பேட்­ட­னில் பிடி­பட்­ட­னர். காரைச் சோதனைச் செய்த போது 450 கிராம் ஐஸ் எனப்­படும் போதைப்­பொ­ருள், 15 கிராம் ஹெராயின், 50 கிராம் அபின் உள்ளிட்டவை பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!