கூடுதல் சேவை வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்­பூர் ஏர்லைன்ஸ் விமா­னத்­தில் 'எகானமி' வகுப்­பில் முன்­ ப­திவு செய்த வாடிக்கை­யா­ளர்­கள் 'பிரீ­மி­யம் எகானமி' வகுப்­புக்கு மாறிக்­கொள்­வதற்­கான ஏலத்­தில் பங்­கேற்க அழைப்­பு­வி­டுக்­கப்­படு­வர். 'மைஎஸ்­கி­யூ­அப்­கி­ரேட்' எனும் இந்தப் புதிய திட்டம் படிப்­ப­டி­யாக அதன் கட்­டமைப்­பில் அறிமு­கப்­படுத்­தப்­படும் என 'கிரிஸ்­ஃப்ளை­யர்' திட்­டத்­தின் அங்கத்­தி­ன­ருக்கு அந்த நிறு­வ­னம் மின்­னஞ்சல் அனுப்­பி­ உள்­ளது. இத்­தகைய திட்டம் அண்மைக் காலங்களில் பல விமான நிறு­வ­னங்க­ளால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது. உலகம் முழு­வ­தும் 30க்கும் மேற்­பட்ட விமான நிறு­வ­னங்கள் இந்த ஏலத் திட்­டத்தைச் செயல்­படுத்­து­வ­தாக வால் ஸ்திரீட் சஞ்சிகை சென்ற ஜன­வ­ரி­யில் செய்தி வெளி­யிட்டி­ருந்தது.

இந்த ஏலத் திட்­டத்­துக்கு வாடிக்கை­யா­ளர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­படும் விதம் விமான நிறு­வ­னத்­துக்கு ஏற்ப வேறு­படு­கிறது. சில நிறு­வ­னங்கள் தனி­யா­கப் பயணம் செய்­ப­வர்­களை­யும் வேறு சில நிறு­வ­னங்கள் அடிக்­கடி விமானப் பயணம் மேற்­கொள்­வர்­களை­யும் தேர்ந்­தெ­டுக்­ கின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்தத் திட்­டத்­துக்­குத் தேர்ந்­தெ­டுப்­ப­வர்­களை பயண தேதிக்கு ஏழு நாட்­களுக்கு முன்­பா­கத் தொடர்­பு­கொள்­ளும். பயணத் துக்கு 48 மணி நேரத்­துக்கு முன்­ன­தாக வாடிக்கை­யா­ளர்­களுக்கு ஏலத்தின் முடிவு தெரி­விக்­கப்­படும் என சிங்கப்­பூர் ஏர்லைன்ஸ் நிறு­வ­னம் தெரி­வித்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!