சட்ட நடைமுறைகளில் மாற்றம் குறித்து ஆலோசனை

பிணை, போலிஸ் விசாரணையில் காணொளிப் பதிவு, நீதிமன்ற நடைமுறைகள், முன்னாள் குற்ற வாளிகளின் மறுவாழ்வு ஆகியவை தொடர்பான சட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். "மாற்றத்தைக் கொண்டு வரும் வேளையில் நாம் எதனால் இந்த நிலைக்கு வந்துள்ளோம், இப்போதுள்ள முறையில் நல்ல அம்சங்கள் எவை என்பதை ஆராய்ந்து அவை மாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று நேற்று குற்ற வியல் சட்ட மாநாட்டில் திரு சண்முகம் பேசினார். அதிகரித்து வரும் அச்சுறுத் தல்களைக் கவனத்தில்கொண்டு பிணை பற்றிய சட்டங்களும் அதன் கட்டமைப்பும் மறுஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்றார் அவர்.

இரண்டாவதாக, போலிஸ் சந்தேகப் பேர்வழிகளிடம் நடத் தும் விசாரணையை காணொளி யாகப் பதிவு செய்யும் நடை முறையில் மாற்றங்களை அறி முகப்படுத்துமுன் அநேகமாக சட்ட மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அவர் சொன் னார். குற்றவியல் நடைமுறைகள் பற்றிய விதிமுறைகளை மாற்றி அமைக்க குழு உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய நீதிமன்ற நடை முறைகளில் சில 19ஆம் நூற்றாண்டில் இருந்து நடப்பில் உள்ளன. முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் விகிதத்தைக் குறைக் கும் முயற்சியாக அவர்களுக்கு வேலை தேடித் தந்து அவர்களை அவர்களின் குடும்பத்தாருடன் ஒன்று சேர்ப்பதில் கவனம் செலுத்தப்படும். இதில் நீதி மன்றங்களுக்கு சமூக அடிப்படை யிலான தண்டனைகள் வழங்கு வதில் கூடுதல் நீக்குப்போக்கு அளிக்கப்படும். "அவர்களை மாற்றுவதும் சீர் திருத்துவதும் சாத்தியமே. எப் போதும் அவர்களைச் சிறைக்கு அனுப்பவேண்டும் என்பதில்லை," என்றார் திரு சண்முகம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!