24 மணி நேர உணவு இயந்திரங்களுக்கு அமோக ஆதரவு

செங்காங், அங்கர்வேல் டிரைவ் புளோக் 320சி-ல் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள 'வெண்ட்கஃபே' தானியங்கி உணவு இயந்திரங்கள் தொடங்கப்பட்டு ஒரு வார காலத் தில் மக்களிடம் மிகப் பிரபலமாகி விட்டன. வீவக காலி தளத்தில் ஐம்பது சதுர அடி பரப்பளவுள்ள இடத்தில் அமைந்துள்ள அந்த உணவகம் சுடச்சுட உணவுகளையும் பானங் களையும் குளிர் பானங்களையும் நொறுக்குத் தீனிகளையும் பரபரப் பாக 24 மணி நேரமும் விற்பனை செய்து வருகிறது.

இங்கு உணவு வாங்க, தெலுக் பிளாங்கா, கெம்பாங்கான் போன்ற தூர இடங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். மதிய, இரவு உணவு வேளைகளின்போது கிட் டத்தட்ட ஒரு மணி நேரம் வரை மக்கள் காத்திருக்கின்றனர். இங்கு கிடைக்கும் 19 வகை யான உணவுகளையும் ருசி பார்த்துவிட வேண்டும் என்பது பலரது ஆவல். விலை $3.50 முதல் உள்ளது. சைவ நாசிபிரி யாணியின் விலை $5.

வரிசையைக் குறைக்க ஒருவர் ஒரு நேரத்தில் இரண்டே இரண்டு சுடவைத்த உணவையே வாங்க முடியும் என்று வரம்பு விதிக்கப் பட்டிருக்கிறது. இந்த உணவ கத்தை ஜேஆர் ஃபுட் குரூப் என்ற நிறுவனம் நடத்துகிறது. மக்களி டம் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஒரு நாளில் 600 டப்பா உணவு விற்பனை ஆவதாகவும் நிறுவனத் தின் தலைமை நிர்வாக அதிகாரி குமாரி ஜோசலின் சங், 49 தெரி வித்தார். இந்த முன்னோடித் திட் டத்திற்கு ஸ்பிரிங் சிங்கப்பூர் அமைப்பும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் ஆதரவு வழங்குகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!