ஒரு மணி நேரத்திற்குள் விற்று முடிந்த 4D எண்

சிங்கப்­பூ­ரின் முதல் ஒலிம்­பிக் தங்கப்­ப­தக்­கத்தை ஜோசஃப் ஸ்கூலிங், 50.39 வினா­டி­யில் பெற்றுத் தந்தார். ஸ்கூலிங் சாதனை நிகழ்த்­திய ஒரு மணி நேரத்­திற்­குள் 5039 எனும் 4 இலக்க எண்கள் (4டி) கொண்ட பந்தயச் சீட்­டு­கள் அனைத்­தும் விற்று முடிந்தன. "இந்த எண்கள் உடைய சீட்­டு­கள் விற்று முடிந்த­தில் ஆச்­ச­ரி­ய­ம் ஒன்றுமில்லை. இந்த மாதிரி வாய்ப்­பு­களை சிங்கப்­பூரர்­கள் பயன்­படுத்­திக்­கொள்­வது ஒன்றும் புதி­தல்ல. நமது நாட்டின் சாதனையைக் கொண்டாடும் நிகழ்­வாக எடுத்­துக்­கொள்ள வேண்­டி­ய­து­தான்," என்றார் பந்தயப் பிடிப்பாளர் வின்ஸ்டன் டான்.

ஒலிம்­பிக் நீச்சல் வரலாற்­றில் முதன்­முறை­யாக அமெரிக்காவின் ஃபெல்ப்ஸ், தென் ஆப்பிரிக்காவின் சாட் லே குலோஸ், ஹங்கேரியின் லாஸ்லோ சே ஆகிய மூவரும் இரண்டா­வது இடத்தைப் பிடித்­த­னர். அவர்­களின் சாதனை நேரமான 51.14ஐ வைத்து வேறு சிலர் 5114 எனும் 4 இலக்க எண்கள் கொண்ட சீட்டுகளை எடுக்­க­வும் போட்­டி ­போட்­ட­னர். "ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக மூவர் ஒரே நேரத்தில் போட்டியை முடித்து வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளனர். இதுவும் ஓர் அரிய சாதனைதான். அதனால்தான் நான் 5114 என்ற எண் கொண்ட சீட்டை வாங்கினேன்," என்றார் 38 வயது ஸ்டீவன் லோ.

ஸ்கூலிங்கின் மகத்தான சாதனையை புதுமையான முறையில் வரவேற்றது சாங்கி விமான நிலையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!