நுகர்வோருக்கான உரிமை பற்றி இலவச உரை

நுகர்­வோர் தங்கள் உரிமை­களைப் பற்றி அறிந்­து­கொள்­ளும் வகை­யில் இல­வச உரை­ நிகழ்த்த சிங்கப்­பூர் நுகர்­வோர் சங்க­மும் சமூக மேம்பாட்டு மன்றங்களும் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தத்­தில் நேற்று கையெ­ழுத்­திட்­டுள்­ளன. இதன்­படி ஆண்­டுக்கு 10 இல­வச உரை வீதம் அடுத்த மூன்று ஆண்­டு­களுக்கு நுகர்­வோர் உரிமை பற்றி இல­வச உரை நிகழ்த்­தப்­படும். நியா­ய­மற்ற வர்த்­தக முறை­களைக் கையா­ளும் கதவைத் தட்­டும் சில்லறை வர்த்­த­கர்­களுக்கு எதி­ராக கடுமை­யான சட்டம் அமுல்­படுத்­தப்­பட்ட ஒரு வாரத்­தில் இந்த ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளது என்றார் தென்மேற்கு வட்டார மேயர் குமாரி லோ யென் லிங். இது குறிப்­பாக முதி­யோர், இல்­லத்­த­ர­சி­கள், சில்லறை வியா­பா­ரி­க­ளால் எளி­தில் ஏமாற்­றக் ­கூ­டிய இளம் மாண­வர்­கள் ஆகி­யோ­ருக்­கு பெரி­தும் உத­வும் என்றார் கல்வி அமைச்­சுக்­கான நாடா­ளு­மன்றச் செய­லா­ள­ரு­மான குமாரி லோ.

நுகர்­வோர் பாது­காப்பு அதா­வது நியா­ய­மான வர்த்­தக முறை­யில் ஏற்­படும் மாற்­றங்கள் குறித்­தும் இந்த இல­வச உரை­யில் விளக்­கப்­படும். இடத்­திற்­கேற்ப இல­வச உரை தயார் செய்­யப்­படும். அதா­வது புதிய குடி­யி­ருப்­பு­களைக் கொண்ட தென்­மேற்கு வட்­டா­ரத்­தில் உரை நிகழ்த்­தும்­போது, வீட்­டுப் புதுப்­பிப்­புப் பணி­யின்­போது கட்­டு­மான ஒப்­பந்த­தா­ரரை அணு­கு­வது தொடர்­பான தக­வல்­களை தெரிந்து கொள்­ள­லாம். உங்களுக்கு எப்­போ­தா­வது ஏதா­வது ஒரு சில்லறை வர்த்­த­க­ரி­டம் தீராத விவ­கா­ரம் ஏதும் இருப்­பின், அந்த வர்த்­த­கர் பற்றி எவ்­வாறு புகார் அளிப்­பது போன்ற விவ­ரங்களை­யும் இந்த உரை­யின் வாயி­லா­கப் பெற­லாம். வீட்­டுக் கதவைத் தட்­டும் சில்லறை வர்த்­த­கர்­கள், நாம் வாங்­கும் பொரு­ளுக்கு முன் ­ப­ணம் செலுத்­து­வது, சில்லறை வர்த்­த­கர்­களுக்கு எதி­ரா­கப் புகார் அளிப்­பது போன்ற தக­வல்­களு­டன் மேலும் தக­வல்­களை இந்த இல­வச உரை­யின்­போது அறிந்­து­கொள்­ள­லாம். நுகர் வோருக்கான முதல் உரை நேற்று ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றத்தில் நடந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்

குடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அலிஃபை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக்

12 Nov 2019

குடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது