ஆளில்லாத வானூர்திகளுக்கு விதிமுறை உருவாக்க ஆய்வு

சிங்கப்பூரின் நகரச் சூழலிலான ஆகாயப் பகுதியில் ஆளில்லாத வானூர்திகள் (ட்ரோன்) பாதுகாப் புடன் பறப்பதற்கு உகந்த வழி களை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் கள் ஆராய்ந்து வருகிறார்கள். ஆகாயப் போக்குவரத்து நிர் வாக முறை என்ற ஒரு முறையின் கீழ் இந்த ஆய்வு நடந்து வருகிறது. வர்த்தக ரீதியிலும் அரசாங்கத் திற்காகவும் இத்தகைய வானூர்தி களைப் பயன்படுத்துவது அதிக ரித்து வருகிறது.

தொடர்ந்து இந்தப் போக்கு நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே ஆய் வாளர்கள் இந்தப் பணியில் ஈடு பட்டு வருகிறார்கள். சாலைகளில் கார்களுக்கு போக்குவரத்து விளக்குகள் முதலான ஏற்பாடுகள் இருப்பதைப்போல ஆகாயத்தில் இத்தகைய வானூர்திகளுக்குக் குறிப்பிட்ட ஆகாயத் தடங்களையும் தடைகளையும் அமல்படுத்துவது ஆய்வாளர்களின் இந்த ஆய்வுத் திட்டத்தின் நோக்கமாகும்.

பேராசிரியர் லோவ் கின் ஹுவாட் (இடது) விமானப் போக்குவரத்து நிர்வாக ஆய்வுக் கழகத்தின் துணை இயக்குநர் முகம்மது ஃபைசல் பின் முகம்மது சாலேயுடன் ஆகாயப் போக்குவரத்துச் சோடனை ஏற்பாடு பற்றி விவாதிக்கிறார். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!