எட்டு கடைகள் உரிமம் ரத்து

புகையிலைப் பொருட்களை விற் பனை செய்யும் எட்டு சில்லறை வர்த்தகக் கடைகளின் உரிமங் களைச் சுகாதார அறிவியல் ஆணையம் தற்காலிகமாக ரத்து செய்துவிட்டது. அந்தக் கடைகள் 18 வயதுக் கும் குறைந்த சிறுவர்களுக்கு சிகரெட்டை விற்றன. இந்த விவரங்களை இந்த ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. ஃபஜார் ரோட்டில் இருக்கும் வேல்முருகன் டிரேடிங், பாசிர் ரிஸ் ஸ்திரீட் 21ல் இருக்கும் இரண்டு 7-இலெவன் கடைகள் முதலா னவை அந்த எட்டு சில்லறை வர்த் தகக் கடைகளில் அடங்கும். தடை விதிக்கப்பட்டதை அடுத்து வேல்முருகன் டிரேடிங் கடை தன் நடவடிக்கைகளை நிறுத்தி இருக்கிறது.

இருந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. கடைகளுக்குப் புகையிலைப் பொருட்களை வாங்க வருவோ ரின் வயதைச் சோதிக்க கடைக் காரர்கள் அடையாளம் எதையும் காட்டுமாறு அவர்களிடம் கேட்க வில்லை என்பது இந்த ஆணையத் தின் அதிகாரிகள் நடத்திய சோதனைகள் மூலம் தெரியவந்தது. ஒருவரின் தோற்றத்தை வைத்து கடைக்காரர்கள் அவரின் வயதை மதிப்பிடும்போது தவறான முடிவுக்கு கடைக்காரர்கள் வந்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று ஆணையம் எச்சரித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!