அனுமதி பெறாத கூட்டம்: 30 பேரிடம் போலிஸ் விசாரணை

செம்பவாங் பூங்காவில் போலிஸ் அனுமதியின்றி நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்ற சந்தேகத்தின் பேரில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிங்கப்பூர் போலிஸ் படை நேற்று மாலை வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை 6.50 மணியளவில் கூடிய அந்தக் கூட் டத்தில் ஆண்களும் பெண்களும் இருந்ததாகவும் அவர்களில் சிலர் வாசக அட்டைகளை ஏந்தி இருந் ததாகவும் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக அவர்கள் அங்கு கூடியதாக ஆரம்பகட்ட விசா ரணை தெரிவிப்பதாகவும் அது குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் போலிஸ் அனுமதி இன்றி கூட்டம் நடத்துவதோ அதற்கு ஏற்பாடு செய்வதோ சட்ட விரோதம் என்பதைப் பொது மக்களுக்கு நினைவூட்ட விரும் புவதாக போலிஸ் தெரிவித்துள் ளது. சிங்கப்பூருக்கு வருகை தரும் அல்லது பணிபுரியும் வெளிநாட்டி னர் இங்குள்ள சட்டதிட்டங் களுக்கு இணங்கி நடக்கவேண் டியது அவசியம் என்றும் அது வலியுறுத்தி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!