தனியார் புது வீடு விற்பனை 2017 மார்ச்சில் 81.8% அதிகரிப்பு; 1,780 வீடுகள் கைமாறின

புதிதாகக் கட்டி விற்கப்பட்ட தனியார் வீடுகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் தொடர்ந்து அதிகரித்தது. பிப்ரவரி மாதம் 979 வீடுகள் விற்கப்பட்டன. இந்த ஆண்டு மார்ச் மாதம் விற்கப்பட்ட வீடுகளின் எண் ணிக்கை 81.8% அதிகரித்து 1,780 ஆக இருந்தது. நகரச் சீரமைப்பு ஆணையத்தின் ஆகப் புதிய புள்ளிவிவரங்கள் இந்த விவரங்களைத் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் விற்கப்பட்ட புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை, சென்ற ஆண்டு இதே மாதத்தில் விற்கப் பட்ட வீடுகளின் எண்ணிக்கை யைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு மார்ச்சில் 843 வீடுகள் கைமாறின. கூட்டுரிமை அடுக்கு வீடுகளையும் சேர்த்து பார்த்தால் சென்ற மார்ச் மாதம் மொத்தம் 2,358 வீடுகள் விற்பனையாயின. இது பிப்ரவரி யில் விற்பனையான 1,308 வீடு களைவிட மிகவும் அதிகம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!