685,000 சிங்கப்பூரருக்கு சமூக சுகாதார உதவி

கிட்டத்தட்ட 685,000 சிங்கப்பூ ரர்கள் கடந்த ஆண்டில் சமூக சுகாதார உதவித் திட்டத்தின்கீழ் (CHAS) $169 மில்லியன் உதவி மானியம் பெற்றதாக சுகாதார அமைச்சின் ஆக அண்மைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குறைந்த, நடுத்தர வருமானம் பெறும் சிங்கப்பூரர்களுக்கும் முன் னோடித் தலைமுறையினருக்கும் 1,650க்கும் மேற்பட்ட பொது மருந் தகங்களிலும் பல் மருந்தகங்களி லும் சமூக சுகாதார உதவி வழங் கப்படுகிறது. அதற்கு கிட்டத்தட்ட 1.3 மில்லியன் சிங்கப்பூரர்கள் தகுதி பெற்றுள்ளனர். தீவு முழுவதும் உள்ள CHAS தகுதியாளர்கள் மற்றும் முன் னோடித் தலைமுறையினரில் 97 விழுக்காட்டினர் தங்களது வீட்டி லிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத் திற்குட்பட்ட ஒரு CHAS மருந்தகத் தையாவது கடந்த ஆண்டு அணு கியிருப்பதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார். இதன் மூலம் தங்களது வீட் டினருகிலேயே பராமரிப்பு உதவிக் கான சௌகரியத்தை அவர்கள் பெற்றுள்ளதாக அவர் கூறினார். பிடோக் நகர சதுக்கத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற குடும்ப கேளிக்கை விழாவில் பேசிய திரு கான், முறையான பொது மருத்து வரைப் பெற்றிருப்பதன் அவசி யத்தை வலியுறுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!