சுடச் சுடச் செய்திகள்

கோ சோக் டோங்: பிரதமர் லீ குடும்பத்தின் ‘சிறிய சச்சரவுகள்’ நாட்டைப் பாதிக்காது

பிரதமர் லீ சியன் லூங்குக்கும் அவரது இரு உடன்பிறப்புகளுக் கும் இடையே அவர்கள் தந்தையின் 38 ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பாக கடந்த சில நாட்களாகக் கொந்தளித்து கொண்டிருக்கும் சச்சரவுகள் பற்றி ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் கருத்துரைத்திருக்கிறார். “சிங்கப்பூர் பல்வேறு நெருக்கடி களையும் துரதிருஷ்டங்களையும் கடந்து வந்துள்ளது. சிங்கப்பூரர் கள் எவ்வித இடர்பாடுகளையும் தாங் குகின்ற மக்கள். “எளிமையான தொடக்கத்தில் இருந்து நமது குடும்பங்களையும் நாட்டையும் வளர்த்து வந்திருக்கி றோம். திரு லீ குவான் இயூவின் பிள்ளைகளுக்குள் நடைபெறும் சம்பவங்களும் சச்சரவுகளும் நம் மைச் சார்ந்தவை அல்ல. அவற்றை வைத்து நம்மை மற்றவர்கள் மதிப் பிட நாம் அனுமதிக்கக்கூடாது,” என்று திரு கோ நேற்று முன்தினம் இரவு தமது ஃபேஸ்புக் பக்கத் தில் எழுதியிருந்தார்.

“நமது பிரச்சினைகளைவிட நாம் பெரிதானவர்கள், நமது வேற் றுமைகளைவிட நாம் வலுவானவர் கள். சிங்கப்பூர் எவ்வித பாதிப்பால் அவதியுற்றாலும், அது வேண்டு மென்றே செய்யப்பட்டதென்றாலும் தெரியாமல் செய்யப்பட்டதென்றா லும் சிங்கப்பூரர்கள் ஒரு போதும் அதைப் பார்த்துக்கொண்டு சாது வாக இருந்துவிடமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். “ஒரு குடும்பத்தின் சிறிய சச்சரவுகள் நம்மைக் கீழே இழுத் துச் சென்று விடமுடியாது. உண் மையான போராட்டங்களை எதிர் கொள்ள நாம் எப்போதும் முன் னோக்கி பார்த்துக் கொண்டி ருப்போம். “சவால்களைச் சமாளித்து நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவே நாம் பாடுபடு வோம்,” என்று திரு கோ தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon