முனையம் 4: தீவிர முன்னோட்ட சோதனைகள்

சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையம் இந்த ஆண்டின் இறுதியில் செயல்படத் தொடங்கும்போது சீரான செயல் பாட்டை உறுதிசெய்யும் வகையில் கடுமையான முன்னோடிச் சோதனைகள் மேற்கொள்ளப்படு கின்றன. இந்த முனையம் விமானப் பயணங்களுக்கு தானியங்கி சோதனை இயந்திரங்களை அதிகம் சார்ந்திருக்கும். இந்த இயந்திரங்களில் இதுவரை, 2,000க்கும் அதிகமான தொண்டூழிய பங்கேற்பாளர்களையும் 1,000 விமான நிலைய ஊழியர்களையும் ஈடுபடுத்திய 100 முன்னோடிச் சோதனைகள் மேற்கொள்ளப்பட் டுள் ளதாக சாங்கி விமான நிலைய குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

தானியங்கி சேவைத் தேர்வுகள், பாதுகாப்பு சோதனை கள், பொருள் சேவை வரியைத் திரும்பப் பெறுதல், பயணப் பெட்டிகள் பெறுதல் போன்ற அனைத்து செயல்முறை களும் பரிசோதனை செய்யப் பட்டன. ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த சோதனைகள் வரும் மாதங்களில் அந்த முனையத்தை பயன்படுத்த வுள்ள விமான சேவைகளின் பங்கேற்புடன் அடுத்த கட்டத்தை எட்டும். முனையம் திறக்கப்பட்டதும் ஏர்ஏ‌ஷியா குழுமத்தின் நான்கு விமான சேவைகள், கேத்தே பசிபிக், சிபு பசிஃபிக், கொரியன் ஏர், ஸ்பிரிங் ஏர்லைன்ஸ், வியட்நாம் ஏர்லைன்ஸ ஆகிய ஒன்பது விமான சேவைகள் அதனைப் பயன்படுத்தும். இந்த முனையத்தில் பார்வை யாளர்கள் பார்வையிடலாம்.