ஹலிமா யாக்கோப்: விவாதம் வலுவாக இருக்கட்டும்

ஆக்ஸ்லி ரோடு விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாடாளுமன்ற விவாதம் வலுவாக இருக்கட்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஹலிமா யாக்கோப் நேற்று கேட்டுக்கொண்டார்.

பிரதமர் லீ, மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களுக்கு உள்ள கட்டுப்பாட்டை கொறடனா மூலம் அகற்றியிருக்கிறார். இதனால் மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவை சகாக்களும் எல்லாவிதமான கேள்விகளையும் தம்மிடம் கேட்கலம் என்பதை பிரதமர் லீ தெளிவுபடுத்தியிருக்கிறார் என்றும் அவர் சொன்னார்.

நேற்று ச:மூக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இன்று கூடும் நாடாளுமன்றம் குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தார்.

"நாளைய விவாதம் மிகவும் வலுவாக இருக்கும் என்று நம்புகிறேன். இதனால் இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு ஏற்படும். நாட்டு நலன்களுக்கும் இது மிகவும் அவசியம்," என்று சபாநாகரான ஹலிமா யாக்கோப் தெரிவித்தார்.