சுடச் சுடச் செய்திகள்

சட்டவிரோதமாகக் கணினியைப் பயன்படுத்திய போலிஸ்காரருக்குச் சிறை

போலிஸ்காரர் ஒருவர் தனது தோழி யைத் தேடிக் கண்டுபிடிப்ப தற்காக காவல்துறைக்கான தனித் து வமிக்க கணினிக் கட்டமைப்பை பலமுறை சட்டவிரோதமாகப் பயன் படுத்தியிருக் கிறார். அதற்காக ஹஃபிட்ஸ் ஹம்ஸா என்ற அந்த போலிஸ்காரர் 2016 டிசம்பர் மாதம் முதல் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப் பட்டுள் ளார். மத்திய போலிஸ் பிரிவில் சார் ஜண்ட் பதவி வகித்த ஹஃபின்ஸ், தனது தோழி, குற்ற நடவடிக்கை களில் ஈடுபட்டவரா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்படு கிறது. இதற் காக நேற்று நீதிமன்றத்தில் அவர் மீது அலுவலகக் கணினியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி யது போன்ற 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. மின்னியல் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறியதாக சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக அவ ருக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

காயம் ஏற்படுத்தியது உள் ளிட்ட மேலும் 22 குற்றச்சாட்டுகளும் வழக் கின்போது பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டன. 2015 ஆகஸ்ட் மாதம் அப்போது 25 வயதான குமாரி மைஸுசா அப் துல்லா என்ற பெண்ணுடன் ஹஃபி ட்ஸ் பழக ஆரம்பித்தார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதத்திற்கு ஹஃபிட்ஸ், போலிஸ் கண்டோன்ட் மென்ட் காம்ப் ளக் ஸில் உள்ள கணினிக் கட்டமை ப்பின் தேடும் கருவியில், குமாரி மைஸுசராவின் பெயர், கைத்தொலைபேசி எண், அடையாள அட்டை எண் ஆகிய வற்றைப் பயன்படுத்தி அவரைப் பற்றிய பதிவுகளைத் தேடினார். ஹஃபிட்ஸுக்காக வாதாடிய அவருடைய வழக்கறிஞர் நிக் கோலஸ் டெங், தனது கட்சிக்காரர் ஏதோ ஆர்வக்கோளாற்றால் இவ் வாறு நடந்து கொண்டார். மற்றபடி வேறு எந்த கெட்ட நோக்கமும் அவரிடம் இல்லை என வாதாடி னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon