டான் சுவான் ஜின்னின் புகைப்படக் கண்காட்சி 

நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், அறப்பணி நிதி திரட்டுக்காக  இருநூற்றாண்டு புகைப்படக் கண்காட்சி ஒன்றை நடத்துகிறார்.
“உலகத்தில் எங்கள் இடம்” என்ற தலைப்பிலான இந்தக் கண்காட்சியில் கடந்த 20 ஆண்டு  சுற்றுப்பயணங்களின்­போது திரு டான்  எடுத்த படங்கள் இடம்பெற் றுள்ளன. ஹோப் இன்‌ஷியேட்டிவ் அலையன்ஸ், ஆர்ட்ஸ் அட் வொர்க், ஃபார் ஈஸ்ட் ஆர்க னைஷேசன், ஃபார் ஈஸ்ட் பிளாசா ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள “உலகத்தில் எங்கள் இடம்” என்ற இந்தக் கண்காட்சி யின் மூலம் திரட்டப்படும் நிதி சிங்கப்பூர் அற நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
எழில்மிகு நிலக்காட்சிகள், நகரங்களை அழகுறக் காட்டுகின் றன அவரது படங்கள். இந்த இடங்களை தங்களது இல்லங் களாக்கி வாழும் பல்வேறு மக்கள், சமூகங்களை முன்னிலைப்படுத்து கின்றன இப்படங்கள். 
இந்தப் புகைப்படக் கண்காட்சி மூலம் திரட்டப்படும் நிதியை சிங்கப்பூரின் வசதி குறைந்த, பின்தங்கிய, ஒதுக்கப்பட்ட சமூகங் களுக்கு  உதவப் பயன்படுத்த முடியும் என அவர் நம்புகிறார்.
கண்காட்சி பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை, ஃபார் ஈஸ்ட் பிளாசா, இரண்டாவது தளத்தில் நடை பெறும். கண்காட்சி குறித்த மேல் விவரங்களை www.hia.sg/ourplaceintheworld என்ற இணையப் பக்கத்தில் பார்க்கலாம்.