உற்பத்தித்துறை தொடர்ந்து 5வது மாதமாக ஜனவரியில் இறக்கம்

ஆசியாவின் பெரும் பகுதிகளில் சென்ற மாதம் உற்பத்தித் தொழில்துறை வேகம் குறைந்தது. அதேவேளையில், சிங்கப்பூரில் அந்தத் துறை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக பலவீனமான அறிகுறிகளை வெளிப்படுத்தியது. 
சிங்கப்பூரின் கொள்முதல் நிர்வாகிகள் அட்டவணையைப் பார்க்கையில், டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில்  ஜனவரியில் 0.4 புள்ளிகள் குறைந்து 50.7 புள்ளிகளாக இருந்தது. 2016 டிசம்பருக்குப் பிறகு இதுவே ஆகக்குறைவான அளவாகும். 
தொடர்ந்து ஐந்தாவது மாதமாக இந்தத் துறை இறக்கம் கண்டது. ஒட்டு மொத்த உற்பத்தித்துறைப் பொருளியல் இன்னமும் விரிவடைந்து வருகிறது என் றாலும் சிங்கப்பூரின் முக்கியமான மின் னணுத் தொழில்துறை தொடர்ந்து மூன் றாவது மாதமாக ஜனவரியில் இறக்கம் கண்டது குறிப்பிடத்தக்கது. 
இந்தத் துறை 0.2 புள்ளிகள் குறைந்து 49.6 புள்ளிகளாக இருந்தது. 
புதிய தருவிப்பு ஆணைகள், புதிய ஏற்றுமதிகள், தொழிற்சாலைகளின் உரு வாக்கம், வேலை நியமன நிலை ஆகியவற்றில் மெதுவான வளர்ச்சியே இருந்ததாக அந்த அட்டவணை குறிப்பிடுகிறது.