அதிக இல்லங்கள் மாறின

நாடு முழுதும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பொது மின்சாரச் சந்தை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக எரிசக்தி சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது.
எஸ்பி சர்வீசஸ் நிறுவனத் திலிருந்து வேறொரு மின்சார நிறுவனத்துக்கு  மாறிக் கொள்ளும் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.
வேறொரு நிறுவனத்திட மிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்பவர்களின் மின்சாரக் கட்டணம் 20லிருந்து 30 விழுக்காடு குறைந்துள்ள தாக ஆணையம் குறிப்பிட்டது.
வேறொரு நிறுவனத்துக்கு மாறியவர்களில் பெரும்பாலா னோர் கூடுதல் கட்டணங்கள் இல்லாத 24 மாத நிலையான கட்டணத் திட்டத்தை தேர்ந் தெடுத்துள்ளதாக ஆணையம் கூறியது.
எஸ்பி சர்வீசஸ் நிறுவனத் திலிருந்து வேறொரு நிறுவனத் துக்கு மாறும் தெரிவு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது
கடந்த மாதக் கடைசி நிலவரப்படி ஜூரோங் வட்டாரத் தில் ஏறத்தாழ 40 விழுக்காட்டு இல்லங்கள் வேறொரு நிறுவனத் திடமிருந்து மின்சாரத்தை வாங்கு கின்றன.
58லிருந்து 78 வரை தொடங்கும் அஞ்சல் குறியீடுகள் கொண்டுள்ள வட்டாரங்கள் அடங்கிய மண்டலம் 1ல், ஏறத்தாழ 25 விழுக்காடு இல்லங்கள் புதிய மின்சார நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்குகின்றன.
53லிருந்து 57 வரை, 79லிருந்து 80 வரை, 82லிருந்து 83 வரை தொடங்கும் அஞ்சல் குறியீடுகள் கொண்டுள்ள வட்டாரங்கள் அடங்கிய மண்டலம் 2ல், ஏறத்தாழ 18 விழுக்காடு இல்லங்கள் புதிய மின்சார நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்குகின்றன.

Loading...
Load next