என்டியு மாணவர் சேர்க்கை அடிப்படையில் மாற்றம்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழத்தின் பலரும் தேர்வு செய்து விரும்பிப் படிக்கும் பட்டப்படிப்புத் திட்டங்களில் சேர்வதற்கான அடிப் படையில் மாற்றம் வரவுள்ளது.
இதன்படி, 111 பாடத்திட்டங் களில் 40ல் தேர்வுகளையும் தாண்டி ஒருவர் தகுதி பெறுவதற்கு நேர் காணல் பேட்டிகள், விருப்பத்தைக் கண்டறியும் முறையிலான தேர்வுகள் ஆகியவற்றுடன் அந்தத் துறை தொடர்பில் ஒருவர் பெற்றிருக்கும் அனுபவம் போன்றவை கருத்தில் கொள்ளப்படும்.

மற்ற 71 பாடத்திட்டங்களுக்கும் மாணவர் சேர்ப்பு திட்டத்தின்கீழ், தேர்வுகளில் தேவையான தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கலைகள், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பு போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மாணவர்கள் அந்தப் பாடத்திட்டங்களில் கல்வி கற்க சேர்த்துக்கொள்ளப்படுவர். இந்த விரிவுபடுத்தப்பட்ட அடிப்படையின் படி, ஒரு குறிப்பிட்ட பாடத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர், அதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருப்பதுடன் அதில் சிறந்து விளங்கக்கூடிய வாய்ப்பும் இருந்தால், தேர்வுகளில் இவரைவிட நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மற்றொரு மாணவரைக் காட்டிலும் அந்த பாடத்திட்டத்தில் பயில சேர்த் துக்கொள்ளப்படுவார்.

மானிடவியல், சமூக அறிவியல், பொறியியல், அறிவியல் பாடத்திட் டங்கள், உயிர் மருத்துவ அறிவியல், வேதியியல் ஆகியவை புதிய தேர்வு முறையில் மாணவர்களைச் சேர்க் கும் திட்டத்தை அறிமுகம் செய்யும்.
மாணவர் சேர்க்கை தவிர, வேலை செய்துகொண்டே கல்வி கற்கும் திட்டமும் விரிவுபடுத்தப் படும் என்று பேராசிரியர் லிங் தெரிவித்தார். இதன்படி, நான்கு ஆண்டு பட்டக் கல்வியில், ஒரு மாணவர் 50 வாரகால வேலைத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!