‘விருப்ப அடிப்படையில் பணி செய்வோரின்  போட்டித்தன்மையை வளர்க்க கூடுதல் ஆதரவு’

விருப்ப அடிப்படையில் பணி செய்யும் பயிற்றுவிப்பாளர்கள் தங்களது திறன்களை மேம்படுத் திக்கொள்ள குறைந்த அள விலான ஊக்குவிப்பே உள்ளது என்று தேசிய பயிற்சி அளிப்போர், பயிற்றுவிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  
இதற்குத் தீர்வுகாணும் வகை யில், உடல் உறுதிப் பயிற்றுவிப் பாளர்கள், இசை ஆசிரியர்கள், விளையாட்டுத் துறை பயிற்றுவிப் பாளர்கள், கலைத் துறையில் பயிற்சி அளிப்போர் என ஒவ் வொரு தொழிலிலும் திறன் மேம்பாட்டுக் கட்டமைப்பை உரு வாக்க தொழிலாளர் இயக்கத்துடனும் தொழில் துறை பங்காளி களுடனும்  சங்கம் இணைந்து செயலாற்றுகிறது.
அனுபவம்மிக்க தன்னிச்சையாகத் தொழில்செய்வோருக்கும் அத்துறையில் முத்திரை பதித்த வர்களுக்கும் சான்றிதழ் வழங்கவும் சங்கம் நோக்கம் கொண்டுள்ளது. விருப்ப அடிப்படையில் பணி செய்வோர் தங்களது வாய்ப் புகளைப் பெருக்கிக்கொள்ளவும் தேவையான திறன்களைப் பெற வும் உதவுவது இதன் இலக்கு.
விருப்ப அடிப்படையில் பணி செய்யும் பயிற்றுவிப்பாளர்களை அதிகம் பயன்படுத்துபவை பள்ளி களாக உள்ளன. 
அண்மையில் தொடக்கக் கல் லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள் இணைக்கப்பட்டதால் இவர்களுக் கான வாய்ப்புகள் குறைந்துள்ளன என்ற அங் மோ கியோ நாடாளு மன்ற உறுப்பினரும் தேசிய தொழிற் சங்கத்தின் உதவித் தலைமை இயக்குநருமான திரு அங் ஹின் கீ இதில் இரு அம்சங் கள் இருப்பதாக சொன்னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு வெளியே நிற்கும் கிறிஸ்தவ மதபோதகர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Apr 2019

'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது