இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத் தில், வேலைநலன் துணைச் சம்பளத் திட்டத்திற்கு தகுதிபெறும் மாதச் சம்பள உச்ச வரம்பை $2,000லிருந்து $2,300க்கு உயர்த்தப்பட்டிருப்பதை நாடாளுமன்ற நியமன உறுப்பினர் முகம்மது இர்ஷாத் (படம்) வரவேற்றுள்ளார். இருப்பினும், ஊழியர்களின் இடைநிலை சம்பளம் அண்மையில் $4,400ஆக உயர்ந்திருப்பதால், சம்பள உச்சவரம்பை $2,640ஆக மேலும் உயர்த்துமாறு அவர் நேற்று முன்தினம் பரிந்துரைத்தார். தங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கூடுத லான இளம் வயதினர் தன்னுரிமை பணியாளர்களாக இரண்டு அல்லது மூன்று வேலைகளைச் செய்வதாக திரு இர்ஷாத் குறிப்பிட்டார். அவர்களுக்கு உதவ, வேலைநலன் துணைச் சம்பளத் திட்டத்திற்கு தகுதிபெறும் வயதை 30ஆக குறைக்குமாறு அவர் பரிந்துரைத்தார். அத்துடன், ரொக்கம், மத்திய சேம நிதி விகிதத்தை தற்போதைய 40:60லிருந்து 50:50 அல்லது 60:40ஆக உயர்த்துமாறும் அவர் கோரிக்கையை முன்வைத்தார்.
'வேலைநலன் திட்ட வழங்கீட்டுத் தொகையை விரிவுபடுத்தலாம்'
1 mins read

