ஸ்ரீ முனீஸ்வரர் பீடத்தின் மாபெரும் குடமுழுக்கு

உபி ரோட்டில் உள்ள சீ செங் கெங் சீன ஆலயத்தில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் பீடத்தின் மாபெரும் குடகுழுக்கு நேற்று காலை நடைபெற்றது. 

கடந்த வெள்ளிக்கிழமை முதல் குடகுழுக்கு தொடர்பான பூஜைகள் நடைபெற்ற பிறகு நேற்றுக் காலை சரியாக 10.15 மணிக்கு பீடத்தில் உள்ள மூர்த்திகளுக்கு குடமுழுக்கு செய்து வைக்கப்பட்டது. 

சிறப்பு விருந்தினராக மவுன்பேட்டன் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற துணை நாயகருமான திரு லிம் பியாவ் சுவான் கலந்துகொண்டார். 

அவருடன் சீ செங் கெங் சீன ஆலயத்தின் தலைவர்களும் அழைக்கப்பட்ட இதர முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.

நாளை முதல் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்தப் பீடத்தில் எழுந்தருளி உள்ள 13 சண்டிகா தேவிகளுக்கு சதசண்டி ஹோம வைபவம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புதிய மின்னியல் சாலைக் கட்டண முறை அடுத்த ஆண்டிலிருந்து தயாராகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jun 2019

அடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங். படம்: எஸ்பிஎச்

17 Jun 2019

புதிய பாணி பெருநாள் கொண்டாட்டம்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jun 2019

வேலை-வாழ்க்கை சமநிலை இளம் தம்பதியரின் முக்கிய பிரச்சினை