சிங்கப்பூரில் மூன்றில் ஒரு வேலை விண்ணப்பத்தில் முரண்பாடுகள்: ஆய்வு

சிங்கப்பூரில் வேலைக்கான விண்ணப்பங்களில் முரண்பாடுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் இதுவே ஆக அதிக விகிதம் என ஃபர்ஸ்ட் அட்வான்டேஜ் உலகப் பின்னணி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு காட்டுகிறது.சென்ற ஆண்டு சிங்கப்பூரில் ஆராயப்பட்ட வேலை விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒன்றில் (30 விழுக்காடு) முரண்பாடுகள் காணப்பட்டன.இந்த முரண்பாடுகளில் பெரும்பாலானவை விண்ணப்பதாரரின் வேலை வரலாற்றிலும் கல்வித் தேர்ச்சியிலும் கண்டுபிடிக்கப்பட்டன. வேலை செய்த தேதி, ஏற்றிருந்த பதவிகள், முக்கிய பொறுப்புகள், சம்பளம், வேலையிலிருந்து விலகியதற்கான காரணம் போன்றவற்றில் முரண்பாடுகள் காணப்பட்டன.

சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட முரண்பாடுகளில் 22 விழுக்காடு நிதிநிலை சார்ந்தவை. நொடிப்பு, கடன், கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குதல் போன்றவை இதில் உள்ளடங்கும்.முக்கிய நிதி மையமான சிங்கப்பூரில், விண்ணப்பதாரரின் நிதிநிலை தொடர்பான சோதனைகள் மேற்கொள்வது முதலாளிகளின் ஆக உயரிய முன்னுரிமையாக இருப்பதாக நிறுவனம் கூறியது. சென்ற ஆண்டு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 36 விழுக்காடு இவை சார்ந்தவை.இந்தப் பட்டியலில் ஹாங்காங் 26 விழுக்காட்டு முரண்பாடுகளோடு இரண்டாவது இடத்திலும், பிலிப்பீன்ஸ் 24 விழுக்காட்டுடன் மூன்றாவது இடத்திலும், மலேசியா 20 விழுக்காட்டுடன் நான்காவது இடத்திலும் இருந்தன.ஆசிய பசிபிக் வட்டாரத்தில், தென் கொரியாவில்தான் ஆகக் குறைவாக 5 விழுக்காடு முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

விண்ணப்பதாரர்களின் பின்னணியை ஆராய்வதற்கான கோரிக்கைகள் பெரும்பாலும் மே மாதத்தில்தான் ஆக அதிகமாக இருப்பதாகவும் நிறுவனம் கூறியது.பலரும் சீனப் புத்தாண்டு போனஸை பெற்றபிறகு வேலை மாறுவது இதற்குக் காரணம் என்றது நிறுவனம்.இந்நிறுவனம் சுமார் 219,000 பின்னணி சோதனை அறிக்கைகளின் தரவுகளைத் திரட்டி இந்தப் பட்டியலை வெளியிட்டது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களின் பின்னணிகளை நிறுவனம் சோதனை செய்திருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!