ஹெங்: நம்பிக்கை தரும் ஆசியா

உலகத்தில் வர்த்தக பதற்றநிலை நிலவும் வேளையில் ஆசிய வட்டாரம் நம்பிக்கையூட்டும் இடமாக உள்ளது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். இந்த வட்டாரம் வியட்நாம் போர், சீனாவின் வளர்ச்சி என பல முக்கிய மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. இங்கு தொடர்ச்சியாக வெளிப்படைத்தன்மையும் ஒத்துழைப்பும் நிலவுகிறது என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆசியா தாராள வர்த்தக நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது, உலகமயமாக்கம், அணுக்கமாக இணைந்து செயல்படுவது ஆகியவை ஊக்கமூட்டுவதாக உள்ளன என்றார் நிதியமைச்சருமான திரு ஹெங். மில்கன் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பின் ஆசிய உச்சநிலை மாநாட்டில் நேற்று பேசிய திரு ஹெங், பொருளியல் தொடர்புகளையும் ஒத்துழைப்புகளையும் வலுவாக்க இந்த வட்டாரம் அதிகம் செய்து வருவதாக கூறினார்.

'ஆர்சிஈபி' உடன்பாட்டின் முக்கியத்துவம்

வட்டார முழுமையான பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு (ஆர்சிஈபி) ஒரு முக்கிய முன்னேற்றம் என்று திரு ஹெங் குறிப்பிட்டார். ஆசியானால் முன்னெடுக்கப்பட்ட இந்த வட்டார உடன்பாடு, 10 ஆசியான் நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, நியூசிலாந்து, தென்கொரியா உட்பட 16 நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளைப் புறக்கணிக் காமல் இருக்கும் விதத்தில் இந்த உடன்பாடு அமைய வேண்டும்.

இது ஆசியாவைக் கோட்டையாக்கும் ஒன்றல்ல. பல அடுக்கு வர்த்தக முறைக்கு உந்துதல் கொடுக்கும் வழிமுறை. டோஹா மாநாட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் ஆசியா செயல்படுகிறது என்ற அவர், நீண்டகாலமாக நிலைகுத்திப் போயுள்ள உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளைச் சுட்டினார்.

உலக வர்த்தக பேச்சுவார்த்தையில் அனைத்து நாடுகளும் வர்த்தகத்தில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து, கலந்துபேசி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று திரு ஹெங் கூறினார்.

தாராள வர்த்தகத்திற்கும் உலகமயமாக்கலுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் ஒத்த சிந்தனையுள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது முக்கியமானது என்றார் அவர். “திருப்புமுனையில் ஆசியா” என்ற கருப்பொருளில் நடைபெறும் மாநாட்டில் பேசிய துணைப் பிரதமர், அமைதியையும் நிலைத்தன்மையையும் கட்டிக்காத்து, தம் மக்களின் வாழ்வை மேம்படுத்த அரசாங்கத்துக்கு உதவும் வகையில், உலக ஊழியரணியில் வெவ்வேறு ஊழியர்களுக்கு வெவ்வேறு பணிகளை பிரித்தளிக்கும் புதிய முறை தேவை என்றார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான இந்த முறை பெரிய அளவில் உருவெடுத்தது. இது பல நாடுகள் முன்னேற உதவியது. சீனாவின் 40 ஆண்டுகால சீர்திருத்தத்திலும் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சீனச் சந்தையைத் திறந்துவிடுவதிலும் இந்த முறையைப் பயன்படுத்தி சீனத் தலைவர் டெங் சியாவ்பெங் ஆற்றிய பங்கை திரு ஹெங் சுட்டினார்.

தக்க சமயத்தில் அரசாங்கம் செயல்படும்

பொருளியல் மந்தநிலையில் சிங்கப்பூர் செலவுகளை அதிகரிக்குமா என்று ராய்ட்டர்ஸ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, பொருளியலுக்கு ஆதரவளிக்க “தக்க சமயத்தில் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய சிங்கப்பூர் அரசாங்கம் தயாராக உள்ளது,” என்றார் திரு ஹெங்.

தொழில்நுட்ப இடையூறுகள், எதிர்காலத்துக்கு ஊழியரணியைத் தயார்ப்படுத்த சிங்கப்பூர் என்ன செய்கிறது என்ற திரு மில்கனின் கேள்விக்கு பதிலளித்த திரு ஹெங், அரசாங்கம் இரு முனைகளிலும் கற்றலை விரிவாக்குகிறது என்றார். ஒரு பக்கம் சிறார்களுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்கும் வகையில் பாலர் பள்ளிகளுக்கு கூடுதல் மானியங்கள் அளிப்பதையும், மறுபக்கம் ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதையும் வாழ்நாள் கல்வியை ஊக்குவிப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்காலம் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்தால் கட்டமைக்கப்படும் என்பதால் சிங்கப்பூர் ஆய்வு மேம்பாட்டில் பெருமளவு முதலீடு செய்கிறது. இதன் அடுத்த கட்டம், ஆய்வுகளைத் தொழில்களாக்குவது. இதன்மூலம், நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நிறுவன ஆய்வுக்கூடங்களை அமைத்து, சிங்கப்பூரில் புதிய தொழில்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளன.

பெருகிவரும் மின் வர்த்தகத்தின் முக்கியத்துவம்

வங்கித்துறை சாராத அமைப்புகளுக்கும் மின்னிலக்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்தியது இதில் சுவாரஸ்யமான ஒரு மேம்பாடு என்ற துணையமைச்சர் ஹெங், சிங்கப்பூர் நாணய ஆணையம் புதிய மின்னிலக்க வங்கி உரிமத்துக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது என்றார்.

தொழில்துறையை மின் வர்த்தகம் பெரிய அளவில் மாற்றியமைத்து, நாட்டு எல்லை என்பதற்கான பாரம்பரியமான விளக்கத்தை மாற்றி வருகிறது. ஒருகாலத்தில் ஆசியா முழுமைக்கும் ஒரே கட்டணமுறை வந்தாலும் ஆச்சரியப்படமாட்டேன் என்று திரு ஹெங் சொன்னார்.

ஹில்டன் சிங்கப்பூர் ஹோட்டலில் இரு நாள் ஆசிய உச்சநிலை மாநாட்டில் கிட்டத்தட்ட 1,500 வர்த்தக, அரசாங்கத் தலைவர்கள் பங்கேற்றனர். உலகத்தில் வர்த்தக பதற்றநிலை நிலவும் வேளையில் ஆசிய வட்டாரம் நம்பிக்கையூட்டும் இடமாக உள்ளது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். இந்த வட்டாரம் வியட்நாம் போர், சீனாவின் வளர்ச்சி என பல முக்கிய மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. இங்கு தொடர்ச்சியாக வெளிப்படைத்தன்மையும் ஒத்துழைப்பும் நிலவுகிறது என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆசியா தாராள வர்த்தக நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது, உலகமயமாக்கம், அணுக்கமாக இணைந்து செயல்படுவது ஆகியவை ஊக்கமூட்டுவதாக உள்ளன என்றார் நிதியமைச்சருமான திரு ஹெங்.
மில்கன் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பின் ஆசிய உச்சநிலை மாநாட்டில் நேற்று பேசிய திரு ஹெங், பொருளியல் தொடர்புகளையும் ஒத்துழைப்புகளையும் வலுவாக்க இந்த வட்டாரம் அதிகம் செய்து வருவதாக கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!