‘டோட்டோ’வில் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்ட அறுவர்

சீனப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஜனவரி 17) நடத்தப்பட்ட ‘டோட்டோ ரீயூனியன்’ அதிர்ஷ்டக் குலுக்கில் ஆறு வெற்றியாளர்கள் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்டனர். 

மொத்த பரிசுத் தொகையான $12,047,766 ரொக்கத்தை வெற்றியாளர்கள் அறுவருக்கிடையே பங்கிட்டால் ஒவ்வொருவருக்கும் தலா $2,007,961 தொகை கிடைக்கும்.

வெற்றியாளர்களில் மூவர் ‘குயிக்பிக்’ எனும் சாதாரண சீட்டுகளை வாங்கியவர்கள். நான்காமவர் சாதாரண சீட்டையும் ஐந்தாமவர் ‘குயிக்பிக் சிஸ்டம் 12’ சீட்டையும் ஆறாவது நபர் ‘குயிக்பிக் சிஸ்டம் ரோல்’ சீட்டையும் வாங்கியவர்கள்.

சுவா சூ காங், தோ பாயோ, கேலாங் ஆகிய இடங்களில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடைகளிலும் அங் மோ கியோ ஹப்பில் உள்ள ஃபேர்பிரைஸ், தெம்பனிஸ் ஸ்திரீட் 81ல் இருக்கும் தெம்பனிஸ் டிரேடிங், தேபான் கார்டன்சில் இருக்கும்  லீ ஆ லான் டிரேடிங் ஆகிய கடைகளிலிருந்தும் பரிசு பெற்ற இந்த சீட்டுகள் வாங்கப்பட்டன. 

#தமிழ்முரசு #டோட்டோ #பரிசு #குலுக்கல்