ஹவ்காங் சாலை சந்திப்பில் விபத்து; நால்வர் காயம்

அப்பர் சிராங்கூன் ரோடு, ஹவ்காங் அவென்யூ 2, ஹவ்காங் அவென்யூ 3 ஆகியவற்றுக்கு இடையிலான சாலை சந்திப்பில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் நால்வர் காயமடைந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) அன்று நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக மாலை 4.02 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

இரு வாகனங்களின் ஓட்டுநர்களான 65 வயது ஆடவர், 23 வயது பெண் ஆகியோர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

20 வயதான இரண்டு பெண் பயணிகள் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.

சம்பவத்தின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.

#தமிழ்முரசு #விபத்து #ஹவ்காங்

Loading...
Load next