ஹவ்காங் குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குள் புகுந்த கார்

ஹவ்காங் அவென்யூ 8ல் வெள்ளை நிற கார் ஒன்று நேற்று பிற்பகல் நேரத்தில் பின்னோக்கி நகர்ந்த போது புளோக் 677ல் நடத்தப் பட்டுவரும் ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ குழந்தை பராமரிப்பு நிலையத் திற்குள் புகுந்தது. அந்த நிலையத்தின் கண்ணாடி சன்னல், கான்கிரீட் சுவரின் ஒரு பகுதி ஆகியவை இந்தச் சம்பவத்தால் நொறுங்கின. இது குறித்து பகல் 12.50 மணியளவில் தகவல் அறிந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவசர மருத்துவ வாகனத்தை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தது.

குழந்தைப் பராமரிப்பு நிலையத் தின் இடிந்த பகுதிகளைச் சரிசெய்ய நான்கு வாரங்கள் வரை பிடிக்கும் என்று கூறிய ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ நிர்வாகம், சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்துக்குள் பெற்றோரைத் தொடர்புகொண்டு மாற்று ஏற் பாடுகள் பற்றி விவரித்தது.ஈ° பாதிக்கப்பட்ட நிலையத்தைச் சேர்ந்த பிள்ளைகள் ரிவர்வேல் கிரசெண்டில் விரைவில் திறக்கப் படவுள்ள ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ வளாகத்தில் வைத்துப் பரா மரிக்கப்பட உள்ளதாகவும் போக்கு வரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அது கூறியது. சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!