சிங்கப்பூரில் $2க்கும் கீழே இறங்கிய பெட்ரோல் விலை

சிங்கப்பூரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை $2க்கும் கீழே இறங்கியுள்ளது. கடந்த இரு வார காலத்துக்குள் இரண்டாவது முறையாக பெட்ரோலின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.

சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் (CASE) பெட்ரோல் விலை கண்காணிப்பு செயலியான Fuel Kaki-ன் தகவலின்படி, 95-ஆக்டேன் பெட்ரோலின் விலை 5 சென்ட் குறைந்து லிட்டருக்கு $1.99 ஆகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிகண்டதையடுத்து, சில்லரை விற்பனையாளர்கள் பெட்ரோல் விலையைக் கடந்த வாரம் 5 முதல் 6 சென்ட் வரை குறைத்தபோது இந்த விலை $2.04 ஆக இருந்தது.

தற்போது மலிவுவிலை ரகமான 92-ஆக்டேன் ரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு $1.95 ஆக உள்ளது. ஷெல், சினோபெக் ஆகிய நிறுவனங்கள் இந்த ரக பெட்ரோலை விற்பனை செய்வதில்லை.

98-ஆக்டேன் ரக பெட்ரோலை லிட்டருக்கு $2.33 என்ற விலையில் எஸ்பிசியும் $2.47 என்ற விலையில் கால்டெக்சும் விற்பனை செய்கின்றன. இந்த சிறப்பு ரக பெட்ரோலை ஷெல் நிறுவனம் லிட்டருக்கு $2.60 என்ற விலையிலும் சினோபெக் $2.50 என்ற விலையிலும் விற்பனை செய்கின்றன.

விற்பனை நிலையங்கள் வழங்கும் விலைக் கழிவுக்கு முந்தைய விலை இவை.

சில்லரை விற்பனைக் கடைகளில் இந்த 5 சென்ட் விலைக் குறைப்பு, மொத்த விற்பனையில் கச்சா எண்ணெய் விலை 20 முதல் 25% விலை குறைந்திருப்பதைக் குறிப்பதாக கவனிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், டீசலின் விலை தொடர்ந்து மாற்றமின்றி இருக்கிறது. எஸ்பிசி லிட்டருக்கு $1.64 விலைக்கும் மற்ற நிறுவனங்கள் $1.67 விலைக்கும் டீசலை விற்பனை செய்கின்றன.

கொவிட்-19 காரணமாக பல நாடுகள் இன்னும் முடக்கநிலையில் இருப்பதாலும் விமானப் போக்குவரத்துக்கான கச்சா எண்ணெய் தேவையில் மாற்றம் இல்லாததாலும் அனைத்துலக அளவில் கச்சா எண்ணெய்யின் தேவை குறைவாக இருப்பதையும் கவனிப்பாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!